அவுக ரூ2 கோடியா... நாங்க ரூ 4 கோடி... உங்க பணத்துக்கும் எங்க பணத்துக்கும் ஜோடி போடலாமா ஜோடி?
Recommended Video
சென்னை: தமிழக அரசியல் களத்தில் எம்.எல்.ஏக்கள் 'ஏல ஆடுகளை'ப் போல குதிரை பேர சந்தையில் கூவி கூவி விற்கப்படுகின்றனர். இந்த சந்தையை அறுவடை செய்யப் போவது அதிமுகவா? திமுகவா? என்பதுதான் பெரும் விவாதம்.
அதிமுக அரசை கவிழ்ப்பதில் திமுக அவ்வளவு தீவிரம் காட்டவில்லை. மேலும் திமுக தலைமையை நம்பி சென்றுவிட்டால்., காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்து போட்டு ஆளும் தரப்பு ஆட்சியை தக்க வைத்துக் கொள்வார் என்கிற அச்சம் அதிமுக எம்.எல்.ஏக்களிடம் இருக்கிறது.

இதனால்தான் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒருவர் கூட திமுக பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை. ஒருவேளை திமுகவின் மாஜி தலைமை ஆக்டிவ் அரசியலில் இருந்திருந்தால் வரை நம்பி நிச்சயம் அதிமுக எம்.எல்.ஏக்கள் கணிசமாக தாவியிருப்பர்.
திமுகவின் தற்போதைய ஆளுமை மீதான தயக்கம், ஆளும் தரப்பின் வியூகங்கள் ஆகியவற்றால்தான் 2 ஆண்டுகளாக எந்த பிரச்சனையுமே இல்லாமல் அதிமுக அரசு ஓடிக் கொண்டிருக்கிறது. திடீரென திமுகவில் அதிகார பசி கொண்ட ஒரு கோஷ்டி, அதிமுக எம்.எல்.ஏக்களை வளைத்துக் காட்டுகிறோம் என கோதாவில் குதித்து கமிஷன்களையும் பேசி வருகிறது.
இந்த பேரத்துக்கு 4 எம்.எல்.ஏக்கள் வரை சம்மதித்துவிட்டனராம். மேலும் சிலர் ஊசலாட்டத்தில் இருக்கின்றனராம். இந்த விவகாரங்கள் அனைத்தும் ஆளும் தரப்புக்கு உளவுத்துறை அனுப்பி வைத்திருக்கிறது.
போனால் போகட்டும்; தேவையே இல்லை என நினைக்கும் சில எம்.எல்.ஏக்களை பற்றி ஆளும் தரப்பு கவலையேபடவில்லையாம். அதேநேரத்தில் உண்மையிலேயே பணத்தேவைக்காக அணி மாறுகிறோம் என கூறும் எம்.எல்.ஏக்களிடம் ஆளும் தரப்பு, திமுக தரப்பு கூறும் பேரத் தொகையை போல இரு மடங்கு பேசுகிறது.
இதனால் அங்கிட்டு போவதா? இங்கிட்டு போவதா? என செல்லும் ஊருக்கு வழியாதவர்களாக திருதிருவென விழி பிதுங்கி போய்கிடக்கிறார்களாம் அதிமுக எம்.எல்.ஏக்கள்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications