திமுக புதிய மா.செ.க்கள் நியமனம்.. குமுறும் விழுப்புரம் சீனியர்... அறிவாலயத்தில் 'பஞ்சாயத்து' கூட்டம்
சென்னை: திமுக மாவட்ட அமைப்புகளில் சில மாற்றங்களை செய்து வெளியிடப்பட்ட அறிவிப்பு விழுப்புரம் திமுகவில் உட்கட்சி பூசலை பட்டவர்த்தமான வெளிப்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து விழுப்புரம் மூத்த அமைச்சர் உள்ளிட்டோர் சென்னை அறிவாலயத்தில் 'பஞ்சாயத்து' கூட்டம் நடத்தி இருக்கின்றனராம்.. ஆனாலும் விழுப்புரம் திமுக இன்னமும் தகித்துக் கொண்டே இருக்கிறதாம்.
விழுப்புரத்தைப் பொறுத்தவரை திமுக என்றாலே அமைச்சரும் அவரது மகனும்தான் என்பது யதார்த்தம். இந்த நிலையில் விழுப்புரம் தொகுதி சீனியர் அமைச்சரின் மகனிடம் இருந்து அதிமுகவில் இருந்து கட்சி தாவியவருக்கு கொடுக்கப்பட்டு விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக்கப்பட்டார். அதாவது விழுப்புரம், வானூர், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் இவற்றை உள்ளடக்கியது விழுப்புரம் தெற்கு மாவட்டம். இந்த மாவட்டத்தின் மா.செ.வாக சீனியர் அமைச்சரின் மகன் இருந்தார். இப்போது தலைநகரம் விழுப்புரம் மற்றும் வானர் இரண்டும் பிரிக்கப்பட்டு விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் சேர்க்கப்பட்டு அதிமுகவில் இருந்து தாவியவருக்கு மா.செ. பதவி தரப்பட்டுவிட்டது. அதாவது விழுப்புரத்தை சீனியர் மற்றும் அவரது மகனிடம் இருந்து திமுக தலைமை பறித்துவிட்டது. இதனை சமன்செய்யவே சில நாட்களுக்கு முன்னர் சீனியர் அமைச்சருக்கு கூடுதல் இலாகாவும் ஒதுக்கப்பட்டது.

ஆனால் கோட்டையான விழுப்புரமே கைவிட்டு போய்விட்டதால் சீனியர் அமைச்சரும் அவரது மகனும் கொந்தளித்து போய் அண்ணா அறிவாலயத்துக்கு படைபரிவாரங்களை அனுப்பினர்; பின்னர் சீனியர் அமைச்சரே கட்சி தலைமையுடன் பஞ்சாயத்து கூட்டத்தை நடத்தி இருக்கிறார். ஆனாலும் எந்த ஒரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லையாம்.
அதேபோல் விழுப்புரம் எம்.எல்.ஏ.வாக இருந்து கொண்டு விழுப்புரம் இல்லாத ஒர மாவட்டத்துக்கு மா.செ.வாக நியமிக்கப்படுவது எந்த வகையில் லாஜிக்காக இருக்காது என புதியவரும் குமுறுகிறாராம். இதனால் அறிவாலயத் தலைமை யாரை எப்படி கட்டிப்போடுவது என்பதில் தீவிர ஆலோசனை நடத்துகிறதாம்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications