ஒரே நாளில் ஆளே மாறிய ஓபிஎஸ்.. சட்டை பாக்கெட்டை நோட் பண்ணுங்க..! காரிலும் முதல்வர் ஸ்டாலின் படம்!
சென்னை: திமுகவில் இணைந்த பிறகு, தன் காரில் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை பொருத்தியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். மேலும், தனது சட்டை பாக்கெட்டிலும், ஜெயலலிதா படத்துக்கு பதிலாக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை வைத்துள்ளார் ஓபிஎஸ்.
அதிமுகவில் இருந்து மூன்று முறை முதல்வராகவும் ஒருமுறை துணை முதல்வராகவும் பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம், நேற்று (பிப்ரவரி 27) திமுகவில் இணைந்தார். இந்நிலையில், திமுகவில் இணைந்த ஒரே நாளில், தனது சட்டை பாக்கெட்டிலும் காரிலும் இருந்த ஜெயலலிதா புகைப்படத்தை அகற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை வைத்துள்ளார். மேலும், காரில் திமுக கொடியும் ஏற்றப்பட்டுள்ளது.

திமுகவில் இணைந்த ஓபிஎஸ்
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். அவருடன் அவரது மகன் முன்னாள் எம்.பி ஓபி ரவீந்தரநாத், உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஆக இருந்த ஐயப்பன், முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.
தாய்க்கழகத்தில் இணைந்ததில் பெருமகிழ்ச்சி எனக் கூறினார் ஓபிஎஸ். இதை தொடர்ந்து, தலைமை செயலகம் சென்று சட்டசபை செயலாளரிடம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து கடிதம் வழங்கினார் ஓ.பன்னீர்செல்வம். இவருடன் ஐயப்பன் எம்.எல்.ஏ.வும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
காரில் படம் மாற்றம்
ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை அண்ணா அறிவாலயத்திற்கு காரில் வருகை தந்தபோது, அவரது காரில் முன்புற டேஷ்போர்டில் ஜெயலலிதா புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. திமுகவில் இணைந்த நிலையில், அவரது காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படமும், காரின் முன்பகுதியில் திமுக கொடியும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது, அவரது சட்டை பாக்கெட்டில் முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படம் இருந்தது. முன்பு, ஓபிஎஸ் சட்டைப் பையில் ஜெயலலிதா படம் இருக்கும். இப்போது, அதற்குப் பதிலாக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை வைத்துள்ளார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ் எடுத்த இறுதி முடிவு
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் தன்னை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தார். ஆனால், அந்த கோரிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் நிராகரித்தனர்.
இதனிடையே, ஓபிஎஸ் தனி கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. அந்த தகவலை அவர் மறுத்ததை அடுத்து அவருடன் இருந்த முக்கிய புள்ளிகள், ஆதரவாளர்கள் என பலரும் விலகி திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்தனர். இதனால் ஓ.பன்னீர்செல்வம் தனித்துவிடப்பட்டார். இந்நிலையில் தான் அவர் திமுகவில் இணைந்துள்ளார். திமுகவில் ஓபிஎஸ்ஸுக்கு முக்கிய பதவியும், அவரது ஆதரவாளர்களுக்கு சீட்களும் வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications