அகில உலக வரலாற்றிலேயே 'நச்’ பேனர்! தூத்துக்குடியை தெறிக்கவிட்ட சீமான் தம்பிகள்!
சென்னை: அகில உலக அரசியல் வரலாற்றிலேயே கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் என்ற பதாகையுடன் கட்சி மாநாட்டில் பங்கேற்பது தூத்துக்குடி நாம் தமிழர் நிகழ்ச்சியில்தான் நடந்துள்ளது. இதனை மேடையிலேயே சீமான் சுட்டிக்காட்டியும் பேசினார்.
தூத்துக்குடியில் மே18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்றனர்.

வழக்கம் போல ஈகைச்சுடரேற்றி, உப்பில்லா கஞ்சி வழங்கி, உறுதி மொழி ஏற்று சீமான் பேருரையாற்றினார். சீமான் தமது உரையின் போது, கட்சியில் எத்தனையோ பாசறைகள் இருக்கிறது.. அதேபோல கட்சியில் இருந்து நீக்கப்பட்டோர் என்ற பெயருடன் வலம் வந்து கொண்டிருக்கின்றனர் சிலர். இந்த கூட்டத்துக்கும் ஒரு வேன் அப்படி வந்து போய் கொண்டிருந்தது.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பாசறை😂❤️ pic.twitter.com/0LZLmhNWQo
— தமிழன் நெஸ்டர் தமிழ்நாடு - THAMIZH STOCK ❤️ (@mascojaya) May 19, 2023
இதைப்பார்க்கும் போது பல்வேறு பாசறைகளுடன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டோர் பாசறை- அவுட் சோர்ஸிங் என ஒரு அமைப்பு இருந்துட்டுதான் போகட்டுமே என எண்ண தோன்றுகிறது. கட்சி என்பது சில அமைப்பு விதிகளைக் கொண்டது; அதனை மீறுகிற போது நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டியிருக்கிறது எனவும் சுட்டிக்காட்டினார்.
தற்போது சமூக வலைதளங்களில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டோர் என்ற பதாகையுடன் தூத்துக்குடியை மிரட்டிய அந்த வாகனம் தொடர்பான படங்கள் பகிரப்பட்டு வருகிறது. நன்னிலம் சட்டசபை தொகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினரே சீமான் படத்துடன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் என்ற பதாகையுடன் வேனில் தூத்துக்குடியில் வலம் வந்துள்ளனர். இதனையே சீமான் மேடையில் சுட்டிக்காட்டி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications