மந்தகதியில் பொள்ளாச்சி வழக்கு?... வாட்ஸ் அப் நிறுவனம் ஒத்துழைப்பு தருவதில் சிக்கல்
சென்னை: வாட்ஸ்அப் நிறுவனம் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று பொள்ளாச்சி பாலியல் கொடுமை குறித்து போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை மயக்கி, பாலியல் தொந்தரவு செய்ததுடன், பணம் பறித்ததாக, சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ் , வசந்தகுமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறது.

அதே நேரம், வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அத்துடன் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறையினருக்கு, வாட்ஸ் அப் நிறுவனம் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனத் தெரிவித்தது. இதனையடுத்து, விசாரணைக்கு ஒத்துழைக்காத பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை ஏன் தடை செய்யக்கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,
சமூக வலைதளங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன், இந்த வழக்கின் விசாரணையை வரும் வியாழக்கிழமை ஒத்திவைத்தனர். இதற்கிடையே, நீதிமன்ற காவலை வரும் மே 6 ஆம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications