பொள்ளாச்சி கொடூரத்தை கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பிப் போன ராகுல்!
தமிழகம் வந்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூலம் பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கு இந்திய அளவில் பெரிதாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Recommended Video

சென்னை: தமிழகம் வந்திருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கு குறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்து இருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்தார். நாகர்கோவில் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் இன்று மாலை காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது.
அதில் கலந்து கொண்டு பேசினார். காலையில் சென்னையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகள் முன்னிலையில் பேசினார்.

பொள்ளாச்சி விவகாரம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழகத்தில் பெரிய பிரச்சனையாகி இருக்கிறது. இதில் சரியான விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக நேற்றுதான் பெரிய போராட்டம் நடத்தியது. கனிமொழி எம்.பி தலைமையில் நடந்த இந்த போராட்டத்திற்கு மக்கள் பொள்ளாச்சியில் பெரிய ஆதரவு அளித்தனர்.

ஆனால் இல்லை
ஆனாலும் கூட இன்னும் இந்த பிரச்சனை குறித்து தேசிய ஊடகங்கள் குரல் எழுப்பவில்லை. தமிழகம் தாண்டி இந்த பிரச்சனை வெளியில் எங்குமே கேட்கவில்லை என்றுதான் கூற வேண்டும். முக்கியமாக வடஇந்திய ஊடகங்கள் இதுகுறித்து இதுவரை பெரிய எந்த ஒரு செய்தியும் வெளியிடவில்லை.

கேள்வி மேல்
இது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த நிலையில்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தமிழக வருகை பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கும் ராகுல் காந்தி இந்த பிரச்சனை குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பேசினால் என்ன ஆகு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு வருடங்களுக்கு பின் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். கடைசியாக அவர் 2016ல் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். ஆனால் இன்று அவர் பொள்ளாச்சி குறித்து எதுவும் பேசவில்லை. பொள்ளாச்சி பிரச்சனை குறித்து சிறிய வார்த்தை கூட அவர் பேசவில்லை.

பெண்கள் பாதுகாப்பு
காலையில் சென்னையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகள் முன்னிலையில் பேசினார்.அப்போது பெண் பாதுகாப்பு, பெண்கள் முனேற்றம்ம் குறித்து பேசினார். ஆனால் அப்போதும் கூட பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிய, தமிழகத்தின் மிக முக்கிய பிரச்சனையான பொள்ளாச்சி பிரச்சனை குறித்து ராகுல் காந்தி பேசவில்லை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications