வாயு கசிவு மிதமானதுதான்.. கோரமண்டல் நிறுவனம் கொடுத்த வாக்குறுதி! மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம்
சென்னை: எண்ணூரில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு மிதமானது என்றும், ஒரே நாளில் இதை சரி செய்யப்படும் என கோரமண்டல் நிறுவனம் விளக்கமளித்து உள்ளதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்து உள்ளது.
சென்னை எண்ணூரில் அமைந்து உள்ளது கோரமண்டல் இண்டர்நேசனல் லிமிடெட் எனும் ரசாயன தொழிற்சாலை. விவசாயத்துக்கு தேவையான ரசாயண உரத்தை உற்பத்து செய்யும் இந்த நிறுவனத்திஒன் ஆலையில் இருந்து நேற்று நள்ளிரவு உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படுத்தும் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஆலையை சுற்றிலும் அமைந்து உள்ள கிராமங்களில் வசித்து வந்த மக்களுக்கு மூச்சுத் திணறல், வாந்தி, மயக்கம், இருமல், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளன.

இதனை அடுத்து ரசாயன வாயு கலந்த பல கிராம பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டே கூட்டம் கூட்டமாக காலி செய்து வேறு பகுதிகளுக்கு சென்று உள்ளார்கள். மூச்சு திணறல் காரணமாக ஏராளமான மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிலர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இந்த ஆலையில் இருந்து வெளியேறியது அமோனியா என்பதை உறுதி செய்து இருக்கிறது.
இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "எண்ணூரில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் ஆலையில் நேற்று இரவு (டிசம்பர் 26) மிதமான அளவு அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டு உள்ளது. இந்த வாயுக் கசிவால் அதிகாலை 4.30 மணியளவில் சின்னகுப்பம், பெரியகுப்பம் கிராமங்களில் மக்கள் அமோனியா கசிவை உணர்ந்து உள்ளனர். இதனை அடுத்து அந்த நிறுவனம் வாயுக் கசிவு ஏற்பட்ட இடத்தையும், பைப்லைனில் எந்த அளவுக்கு சேதாரம் ஏற்பட்டுள்ளது என்பதையும் கண்டறிந்து அது ஒரே நாளில் சரி செய்யப்படும் எனத் தெரிவித்து உள்ளது.
ஆகையால் இந்த நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு சீரமைப்புப் பணிகளை நிறைவு செய்து தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதல் பெற்ற பின்னரே அமோனியா எடுத்துச் செல்லும் குழாயின் இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications