மதத்தை வைத்து அரசியல்... ரஜினி விமர்சித்தது திமுகவை... பிளேட்டை திருப்பிப் போட்ட பொன் ராதாகிருஷ்ணன்
சென்னை: மதத்தை வைத்து அரசியல் செய்வதாக ரஜினிகாந்த் விமர்சித்தது பாஜகவை அல்ல- திமுகவைத் தான் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தூண்டுதலால்தான் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் காங்கிரஸ், திமுக செயல்படுகின்றன. இன்னொரு பாகிஸ்தான் உருவாவதற்கு நாம் இடம் தரக் கூடாது.
2021-ல் ஆட்சிக்கு வரவேண்டும் என துடிக்கிறது திமுக. இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருப்போம் என்று திமுக சொல்வதை யாரும் நம்பவும் வேண்டாம். இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் போலீசாரோ உளவுத்துறையோ செல்ல முடியாத நிலை இருக்கிறது. அங்கே யார் குடியுரிமை பெற்றுள்ளனர் என்பதே தெரியவில்லை.
மதத்தை வைத்து அரசியல் செய்வதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது திமுகவைத்தான்.. பாஜகவை அல்ல. தமிழக பாஜகவுக்கு தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார்.
அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். குடியுரிமை சட்ட திருத்தத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று பிரதமர் மோடி உறுதியளித்திருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதையே தெளிவாக கூறியுள்ளார்.
இதை ஏற்றுக் கொண்டு இங்கே இருப்பவர்கள் வசனம் பேசாமல் இருக்க வேண்டும் . நாட்டின் பிரதமராக பதவி ஏற்ற மோடி, 130 கோடி மக்களுக்கு வேலைக்காரன் என்றார். இந்துகளுக்கு மட்டும் வேலைக்காரன் என சொல்லவில்லையே? பிரச்சனைகளை கவனமாக, கண்ணியமாக மோடி கையாண்டு வருகிறார்.
எந்த பிரச்சனையையும் அவர் இரும்புக்கரம் கொண்டு அடக்கவில்லை. இப்படி செய்வதில் என்னதான் தவறு உள்ளது?. இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
Recommended Video
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications