பொங்கல் பண்டிகை.. 16,768 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்... அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16,768 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் வெளியூர்களில் தங்கி பணிபுரிபவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
தீபாவளி சமயத்திலும் கூட 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சிறப்புப் பேருந்து நிலையங்கள்
இது தொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், "2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு , சென்னையில் 5 சிறப்புப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து ஜனவரி 11 முதல்13 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

16,768 சிறப்புப் பேருந்துகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16,768 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். ஜன. 11 - 13 வரை சென்னையில் இருந்து 10,300 பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல பிற ஊர்களில் இருந்து 6,468 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் முடிந்து சொந்த ஊர் திரும்ப ஏதுவாக மொத்தம் 16,709 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக ஜனவரி 16 முதல் 18 வரை 16,709 பேருந்துகள் இயக்கப்படும்.

எப்படி முன்பதிவு செய்யலாம்
பயணச்சீட்டை முன்பதிவு செய்ய கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், MEPZ (தாம்பரம் சானிடோரியம் ) பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல www.tnstc.in , tnstc official app, ரெட்பஸ், பேடிஎம் போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

புகார் எண்கள்
பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு 94450 14450 , 94450 14436 ஆகிய தொலைப்பேசி மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 , 044 24749002 என ஆகிய தொலைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

நெடுஞ்சாலை உணவகம்
அரசு பேருந்துகள் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ள சாலையோரம் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவுகள் இருந்தால் அது குறித்து ஆய்வு நடத்தி உணவக உரிமம் ரத்து செய்யப்படும். அதேபோல படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்யும் மாணவர்களுக்குப் பள்ளிகளிலேயே ஆலோசனை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications