பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? ரயிலில் டிக்கெட் முன்பதிவு தொடங்க போகுது.. நோட் பண்ணி வச்சிக்கோங்க
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பும் ரயில் பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு வரும் 12 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 15.01.2025 அன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் சொந்த ஊர் செல்ல நினைக்கும் பயணிகள் ஐஆர்சிடிசி மற்றும் ரயில்வேயில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது பொங்கல் பண்டிகை. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று, அங்கு தனது உற்றார் உறவினர்களுடன் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி செல்வார்கள்.

குடும்பத்துடன் செல்வதால் ரயிலில் முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணம் செய்ய திட்டமிடுவார்கள். ஏனெனில் கடைசி நேரத்தில் ரயில், பேருந்துகளில் பயணம் செய்ய நினைத்தால் படாத பாடு படவேண்டியிருக்கும். பேருந்துகள், ரயில் நிலையங்களில் நிற்க கூட முடியாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் பயணிகள் கூட்டமாகவே இருக்கும். இதனை தவிர்க்கும் விதமாக முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள்.
சென்னையில் இருந்து மட்டும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறார்கள். ரயில்களில் தற்போது 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதன்படி, பார்த்தால் வரும் பொங்கலுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. அதாவது 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வருகிறது.
15 ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 16 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகை திங்கள் கிழமை வருகிறது. இதனால், நீண்ட நாள் விடுமுறை வருவதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு வெள்ளிக்கிழமையே பயணம் செய்ய விரும்புவார்கள். இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
அந்த வகையில், ஜனவரி 10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பயணம் செய்ய திட்டமிடுபவர்கள் வரும் 12 ஆம் தேதி முன்பதிவு செய்யலாம்... ஜனவரி 11 ஆம் தேதி சொந்த ஊர் செல்ல திட்டமிடுபவர்கள் வரும் 13 ஆம் தேதி முன்பதிவு செய்யலாம். ஜனவரி 12 ஆம் தேதி செல்ல நினைப்பவர்கள் வரும் 14ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். ஜனவரி 13 ஆம் தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15 ஆம் தேதி முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.
ரயில்வே டிக்கெட் புக்கிங் இணையதளமான ஐஆர்சிடிசி மற்றும் ரயில்வேயில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பொதுவாக பண்டிகை நாட்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.. அதேபோல, டிக்கெட் முன்பதிவும் தொடங்கிய சில நிமிடங்களில் காலியாகிவிடும். தீபாவளி பண்டிகை, ஆயுத பூஜை பண்டிகை போன்ற நாட்களில் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் விற்று வெயிட்டிங் லிஸ்ட் ஆக போனது.
காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கிய நிலையில் ஐஆர்சிடிசி மற்றும் பிற இணையதளங்கள் மூலமாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய பயணிகள் ஆர்வம் காட்டினர். ஆனால் டிக்கெட் ரிசர்வேஷன் தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் விரைவு ரயில்களில் உள்ள இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு அடுத்தடுத்து முடிவடைந்து வெயிட்டிங் லிஸ்ட்டை காட்டியது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் கண் இமைக்கும் நேரத்தில் டிக்கெட்டுகள் காலியானது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications