தென்மாவட்ட மக்களுக்கு குட்நியூஸ்.. மதுரை வழியாக சென்னை எழும்பூா்-திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். ஜனவரி 13, 14 ஆம் தேதி நெல்லை, நாகர்கோவில், மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து இன்று காலை 10.45 மணிக்கு திருவனந்தபுரத்துக்கு மதுரை வழியாக மேலும் ஒரு சிறப்பு ரயில் புறப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக பலரும் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கிவிட்டனர். பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வே சார்பில் முக்கிய வழித்தடங்களில் பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

special trains

கடந்த வெள்ளிக்கிழமை முதலே ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை இன்று அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இருந்து மதுரை, திருச்செந்தூர், கன்னியாகுமரி, நெல்லை போன்ற தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் நேற்று அதிகளவில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை வழியாக சென்னை எழும்பூா் - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 13 ஆம் தேதி திங்கள்கிழமை இரவு 11.45 மணிக்கு தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, மத்திய திருவனந்தபுரம், வழியாக திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) அடுத்த நாள் பிற்பகல் 2.00 மணிக்கு சென்றடையும்.

ஒரு மாா்க்கத்தில் மட்டும் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலில் 10 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+