சாதாரண வந்தே பாரத் விடுங்க.. சென்னை எழும்பூர் டூ நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில்.. இன்று இயக்கம்
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி நாளை (ஜனவரி 13) மற்றும் நாளை மறுநாள் (ஜனவரி 14) ஆகிய 2 நாட்கள் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
நாளை மறுநாள் 15ம் தேதி மற்றும் 16, 17 ஆகிய தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.. இதற்காக தமிழக மக்கள் தயாராகி வருகிறார்கள்.. எனவே சொந்த ஊர்களுக்கும் பயணமாகி வருகிறார்கள்.

அந்தவகையில், சென்னையிலிருந்தும் பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு படையெடுத்து செல்கின்றனர்.. மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு பஸ்களும், ரயில்களும் விடப்படுகின்றன.. என்றாலும், இவைகளில் ஏற்கனவே முன்பதிவுகள் முடிந்துவிட்டன.. கோயம்போடு, கிளாம்பாக்கம் 2 பஸ் ஸ்டாண்டுகளிலுமே கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
சிறப்பு ரயில்கள்: இப்படிப்பட்ட சூழலில், சென்னையிலிருந்து தென்மாவட்டம் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கிறது.
அதன்படி ஜனவரி 13 (இன்று), ஜனவரி 14 (நாளை) என 2 நாட்கள் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் (வண்டி எண் 06081) இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.45 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைய உள்ளது.
வந்தே பாரத்: அதேபோல் மறுமார்க்கமாக இன்று மற்றும் நாளை ஆகிய 2 தினங்கள் நாகர்கோவில்-சென்னை எழும்பூர் வந்தே பாரத் சிறப்பு ரயில் (06082) இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில் அன்றைய தினங்களில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும் வந்தேபாரத் சிறப்பு ரயில் (06082) அன்றைய தினம் இரவு 11.25 மணிக்கு சென்னையை வந்தடையும். இந்த ரயில்களில் மொத்தம் 8 பெட்டிகள் இருக்கும். இந்த ரயில்கள் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இருமார்க்கமாக நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தென் மாவட்டம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வரும்நிலையில், இந்த ஏற்பாடானது தென்மாவட்ட பயணிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications