தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா கோலாகலம்! உற்சாகத்துடன் தை 1ஐ வரவேற்ற தமிழர்கள்!
சென்னை: தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழ் பெருங்குடி மக்கள் பொங்கல் திருநாளை மிக உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
தை முதல் நாள் தமிழர்களின் திருநாளாம் பொங்கல் விழா, தமிழர் கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தும் ஒரு உன்னத திருநாளாக திகழ்ந்து வருகிறது. இது வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட விவசாய திருநாளாவும் கொண்டாடப்படுகிறது.

சாதி, மத, இன வேறுபாடு எதுவுமின்றி, உழைப்பைத் தந்து உதவியவர்களையும் எண்ணி உழவர் பெருங்குடி மக்கள் நன்றி தெரிவித்து வணங்கி மகிழும் இனிய திருவிழாவாக பொங்கல் நன்னாள் பார்க்கப்படுகிறது.
தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகள் என்றால் குறிப்பிட்ட மதத்தினர் அவரவர் பண்டிகைகள் என கொண்டாடுவார்கள். ஆனால் தை முதல் நாளான பொங்கல் பண்டிகையை மட்டும் தான் சாதி, மத வேறுபாடின்றி தமிழ்நாட்டில் வாழும் அனைவரும் தமிழர்கள் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.
அதுமட்டுமல்ல உலகில் இயற்கையை கொண்டாடும் ஒரே இனம் தமிழினம் தான் என்பதை பறைசாற்றும் வகையில் இந்த நன்னாள் பார்க்கப்படுகிறது. உழவுக்கும், கால்நடைகளுக்கும் வணக்கம் செலுத்தும் திருநாளான பொங்கல் விழாவை ஒட்டி தமிழக கிராமப்புறங்களில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மனித நேயம் வளர்க்கும் தமிழ்ச் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டினை உலகுக்கு உணர்த்திடும் மகத்தான திருவிழாவாகத் தைப் பொங்கல் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் புத்தாடைகள் அணிந்து புதுப்பானையில் பொங்கல் வைத்து தை 1ஐ உற்சாகமாக வரவேற்றிருக்கிறார்கள்.
அதேபோல் பொங்கலை ஒட்டி மதுரை அவனியாபுரத்தில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. இதனை காண லட்சக்கணக்கில் பார்வையாளர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications