பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு.. முழு அட்டவணை தெரியுமா? எந்தெந்த நாளுக்கு எப்போது முன்பதிவு?
சென்னை: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன் பதிவு இன்று தொடங்கிய நிலையில் எப்போது பயணம் செய்ய எந்தெந்த நாட்களில் முன் பதிவு செய்யலாம் என்பதை பார்ப்போம்.
அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை போகியுடன் பொங்கல் பண்டிகை தொடங்குகிறது. ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல், 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 17 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியது. ரயிலில் பயணம் செய்ய 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து விடும் வசதி உள்ளது. அந்த வகையில் ஜன.11 ஆம் தேதி பயணம் செய்ய இன்று முன் பதிவு தொடங்கி முடிந்துவிட்டது.
ஜனவரி 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பயணம் செய்ய நாளை செப்டம்பர் 14 ஆம் தேதி முன் பதிவு செய்ய வேண்டும்.
ஜனவரி 13 ஆம் தேதி சனிக்கிழமை பயணம் செய்ய செப்டம்பர் 15 ஆம் தேதி முன் பதிவு செய்ய வேண்டும்.
ஜனவரி 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்ய செப்டம்பர் 16 ஆம் தேதி முன் பதிவு செய்ய வேண்டும்.
ஜனவரி 15 ஆம் தேதி திங்கள்கிழமை பயணம் செய்ய செப்டம்பர் 17 ஆம் தேதி முன் பதிவு செய்ய வேண்டும்.
ஜனவரி 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பயணம் செய்ய செப்டம்பர் 18 ஆம் தேதி முன் பதிவு செய்ய வேண்டும்.
ஜனவரி 17 ஆம் தேதி புதன்கிழமை பயணம் செய்ய செப்டம்பர் 19 ஆம் தேதி முன் பதிவு செய்ய வேண்டும்.
ஐஆர்சிடிசி என்ற இணையதளத்தின் வாயிலாகவும் டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் ரயில் டிக்கெட் முன் பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது. வாய்ப்புள்ள விரைவு ரயில்களில் ஓரிரு பெட்டிகளில் கூடுதலாக இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications