பொங்கலுக்கு சர்ப்ரைஸ் தர்றாரா ஸ்டாலின்.. ரூ.1000 விடுங்க.. மாஸ் பிளான் ரெடியாகுதாமே.. ஆவலில் தமிழகம்
சென்னை: பொங்கல் நெருங்கி கொண்டிருக்கிறது.. பொதுமக்களுக்கான சர்ப்ரைஸ் அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பானது ரொக்கம் மற்றும் பொருட்கள், அல்லது ரொக்கம் என தொடர்ந்து தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு, தகுதி வாய்ந்த அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன், 1,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
கரும்பு மிஸ்ஸிங்: வழக்கமான அரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், திராட்சை மற்றும் கரும்புடன், பொருட்களுக்குப் பதில் பரிசுத் தொகையாக ஆயிரம் ரூபாயை வங்கிக்கணக்கில் வழங்கப்பட்டன. ஆனால், கரும்பு வழங்கப்படாதது உட்பட, திமுக அரசு வழங்கிய பரிசு தொகுப்பு குறித்தும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்திருந்தன.
இந்நிலையில், விரைவில் பொங்கல் பண்டிகை வரப்போகிறது.. இந்த பொங்கல் பண்டிகைக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் ஏற்பட்டு வருகிறது.
எப்போது அறிவிப்பு: பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று அமைச்சர் பெரிய கருப்பன் உறுதி தந்திருந்தாலும், இன்றும் உறுதியான அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஏற்கனவே, மகளிர் உரிமை தொகை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வரும்நிலையில், லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில், இதையே மையமாக வைத்து தேர்தலின்போது பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டிருக்கின்றன..
அதனால்தான், கார்டுதாரர்களுக்கு வரும் 1000 ரூபாயுடன் கூடிய, பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு வெளியிடலாமா? என்று தமிழக அரசு பரிசீலித்து வருவதாக சொல்கிறார்கள்.
பொங்கல் பரிசு தொகுப்பு: அந்தவகையில், பொங்கல் பரிசு தொகுப்பில் 1,000 ரூபாய்க்கு பதிலாக 2000 ரூபாய் வழங்கலாமா? என்று தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. மற்றொருபுறம், எதிர்பாராத விதமாக, ஒரே மாதத்தில் புயல், வெள்ள பாதிப்பில் தமிழகம் சிக்கி கொண்டு விடவும், நிவாரண தொகைகளை வழங்கவேண்டிய கட்டாயமும் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. எனினும், பொங்கல் தொகுப்பு மிஸ் ஆகாது என்கிறார்கள்.
இந்நிலையில், மற்றொரு தகவல் கசிந்து வருகிறது.. வழக்கமாக, பொங்கலுக்கு ஒரு மாதம் முன்பேயே கரும்பு கொள்முதல் உள்ளிட்ட பணிகள் துவங்கிவிடும்.. ஆனால், இதுவரை கரும்பு கொள்முதல் பற்றிய அறிவிப்பு எதுவுமே வெளியாகாமல் உள்ளதாக தெரிகிறது.
கூட்டுறவு அதிகாரிகள்: அதேபோல, கூட்டுறவு துறை அதிகாரிகள், மக்களுடன் முதல்வர் முகாம் பணிகளில் ஈடுபட்டு வருவதால், தாலுகா வாரியாக வழங்க வேண்டிய வேட்டி சேலைகளின் எண்ணிக்கை பற்றிய தகவல்களும் இதுவரை இறுதியாகவில்லையாம்.. ஒதுக்கீடு விவரங்கள் மொத்தமாக கணக்கிடப்பட்ட பிறகுதான், பகுதி வாரியாக விநியோகம் செய்யப்பட்டு மக்களுக்கு விநியோக பணிகள் தொடங்கப்படும் என்கிறார்கள்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ரேஷன் கடைகளில் வழங்க உள்ள வேட்டி, சேலை, கரும்பு ஒதுக்கீடு பணிகள் இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளது.. கடைசி நேரத்தில் அறிவிப்பு வெளியாகலாம் என்றாலும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் எகிறியபடியே உள்ளன.












Click it and Unblock the Notifications