துப்பாக்கிகளோடு குவிந்த துணை ராணுவம்.. சுற்றி வளைக்கப்பட்ட பொன்முடி வீடு.. என்ன நடக்கிறது?
சென்னை: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சார்பாக மத்திய துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு போலீசுக்கு பதிலாக மத்திய துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.
சமீபத்தில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார். அதோடு அமலாக்கத்துறை மூலம் கைதும் செய்யப்பட்டார்.கடந்த முறை வருமான வரித்துறை ரெய்டின் போது ரெய்டு நடக்கும் இடங்களில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிராக போர்கொடி தூக்கி போராட்டம் செய்தனர்.

முக்கியமாக கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் அதிகாரிகள் சோதனையிட சென்ற போது பெண் அதிகாரியிடம் கரூர் மாநகராட்சி கவிதா கணேசன் உள்ளிட்டவர்கள் வாக்குவாதம் செய்தனர்.
இந்த வாக்குவாதத்தில் திமுக நிர்வாகியை வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கி உள்ளனர். திமுக நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து.. உன் ஐடி கார்ட் காட்டு.. நீ போய் ரெய்டு பண்ணு.. ஆனா அடிச்சதுக்கு மன்னிப்பு கேட்டுட்டு போ.. உங்க வீட்டு ஆம்பளைய இப்படித்தான் அடிப்பியா, என்று கேட்டுள்ளார் கவிதா கணேசன். இதனால் சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அவரது ஆதரவாளர்களால் வருமான வரித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரில் திமுக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் சில வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிராகவும் புகார் கொடுக்கப்பட்டது.
தமிழ்நாடு போலீசிடம் தெரிவிக்காமல் வந்ததே பாதுகாப்பு குறைப்பாட்டிற்கு காரணம் என்று அப்போது திருப்பூர் எஸ்பியும் விளக்கம் கொடுத்து இருந்தார். இந்த நிலையில்தான் கடந்த முறை மத்திய துணை ராணுவ படை வீரர்கள் கடைசி நேரத்தில் வந்து ரெய்டு மேற்கொண்ட அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுத்தனர்.
இந்த நிலையில் அதன்பின் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு செய்தனர். போலீசுக்கு தெரிவிக்காமல் மத்திய துணை ராணுவ படை வீரர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டனர். கடந்த முறை போல நடக்க கூடாது என்பதால் மத்திய துணை ராணுவ படை வீரர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டனர்.
இந்த நிலையில் தற்போது பொன்முடி வீட்டிலும் அமலாக்கத்துறை சார்பாக மத்திய துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்ட உள்ளனர். தமிழ்நாடு போலீசுக்கு பதிலாக மத்திய துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். செந்தில் பாலாஜி வீட்டில் பாடம் கற்ற நிலையில் அமலாக்கத்துறை இந்த ரெய்டுக்காக போலீசை பயன்படுத்தாமல் துணை ராணுவ படையை களமிறக்கி உள்ளது.
ரெய்டு: காலை 7 மணி முதல் 5 பேர் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது. விழுப்புரத்தில் உள்ள அமைச்சரின் வீட்டிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. சைதாப்பேட்டை தி நகர் இல்லம், சென்னையில் உள்ள பொன் முடி மகன் இல்லம், விழுப்புரம் இல்லம் உள்ளிட்ட 9 இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் பொன்முடி இல்லத்தில் மட்டும் மொத்தம் 50 அதிகாரிகள் குவிந்து உள்ளனர். அவரின் அலுவலகத்தில் 50 அதிகாரிகள் குவிந்து உள்ளனர்.அமைச்சர் பொன்முடி இப்போது எந்த இல்லத்தில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications