இனி பொன்முடி அமைச்சராவது ஆளுநர் கையில் இல்லை.. தேர்தல் ஆணையம் கையில்: சத்யபிரதா சாகு சொன்ன பாயிண்ட்!
சென்னை: பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தலை நடத்த உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும், ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல்: தமிழ்நாட்டின் விளவங்கோடு உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாக உள்ள 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, நாடாளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்முடி தகுதி நீக்கம் காரணமாக அங்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது தேர்தல் ஆணையம்.
பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததன் காரணமாக, திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. அப்படி இருக்கும்போது, திருக்கோவிலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டநிலையில், தேர்தல் தேதி அறிவிப்பில் திருக்கோவிலூர் தொகுதியின் பெயர் இல்லை.
திருக்கோவிலூர் இடைத்தேர்தல் இல்லை: திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை. முதல் அறிவிப்பில் தவறுதலாக இடம்பெற்றுவிட்டது என்றும், தேர்தல் தேதி அட்டவணையில் திருக்கோவிலூர் தொகுதி இல்லை என்றும், தமிழ்நாட்டில் விளவங்கோடு தொகுதியில் மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.
எம்.எல்.ஏவாக தொடர்கிறார் பொன்முடி: உச்ச நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும், அவர் குற்றவாளி என்ற சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து இழந்த தன் எம்.எல்.ஏ பதவியை மீண்டும் பெற்றார் பொன்முடி. திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏவாக தொடர்கிறார் பொன்முடி.
பொன்முடி எம்.எல்.ஏ ஆனதன் அடிப்படையில் அவரை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனது பரிந்துரைக் கடிதத்தை மார்ச் 13 அன்று மாலை அனுப்பினார். 14ஆம் தேதி அமைச்சராக பொன்முடி பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் டெல்லி சென்ற ஆளுநர்: ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி மார்ச் 14ஆம் தேதி காலையிலேயே டெல்லி புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் ரவி இன்னும் சென்னை திரும்பாத நிலையில், பொன்முடி இதுவரை அமைச்சராக பதவியேற்க முடியவில்லை. ஆளுநர் தமிழகம் திரும்பிய பின்னர் பொன்முடி பதவியேற்பார் என சபாநாயகர் கூறியிருந்தார்.
இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் அமைச்சராக பொன்முடி பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் காரில் தேசியக்கொடி அகற்றப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது புதிதாக ஒருவர் அமைச்சராகப் பதவியேற்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொன்முடி அமைச்சராக பதவியேற்க முடியுமா?: இந்நிலையில், இதுகுறித்த கேள்விக்கு தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பதில் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் அமைச்சராக ஒருவர் பதவியேற்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
பொன்முடிக்கு வந்த சிக்கல்: ஒருவர் அமைச்சராக பதவியேற்க வேண்டும் என்றால் அதற்கு அரசாணை வெளியிட வேண்டும். அமைச்சராகப் பதவியேற்கும் நிகழ்விற்கான செலவினங்கள் ஒதுக்கப்பட வேண்டும். தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளதால் அமைச்சராக ஒருவர் பதவியேற்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அரசு கோரிக்கை வைக்க வேண்டும்.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தால் சத்யபிரதா சாகு தலைமையிலான குழு பரிசீலித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்கும். இந்திய தேர்தல் ஆணையம் தான், அமைச்சர் பதவியேற்பு குறித்து முடிவு செய்யும். அனுமதி அளிக்கவோ மறுக்கவோ செய்யலாம்.
எனவே, அமைச்சராக பொன்முடி பதவி ஏற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. பொன்முடி கடந்த 14ஆம் தேதியே அமைச்சராகப் பதவி ஏற்றிருக்க வேண்டிய நிலையில், ஆளுநர் டெல்லி சென்றதால் தாமதம் ஏற்பட்டது. இப்போது தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications