எடப்பாடி ஸ்ட்ரைட்டா பிரதமர்தான்.. தகுதியானவரு.. பொன்னையன் பொளேர்.. மோடி?
சென்னை: தமிழ்நாட்டிலிருந்து பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளதாக அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான பொன்னையன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து ஒருவரை பிரதமராக்குவோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை சுட்டிக்காட்டி, செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இப்படிக் கூறியிருக்கிறார்.

அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளூர் அரசியல், தேசிய அரசியல், உலக அரசியல் என எல்லா அரசியலும் தெரியும் என்றும் புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் தலைவர் எனவும் பொன்னையன் புகழ்ந்துள்ளார். அமித்ஷா கூறியபடி தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் பிரதமராக ஆக வேண்டும் என்றால் அதற்கான தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், உண்மையிலேயே எடப்பாடி பழனிசாமி மீது கொண்ட அக்கறையின் காரணமாக இப்படி பேசினாரா அல்லது அவரை புகழ்வது போல் புகழ்ந்து இகழும் நோக்கில் வஞ்சிப்புகழ்ச்சி அணி பாடினாரா என்பது தெரியவில்லை.
மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமராகும் தகுதி இருப்பதாக கிளப்பிவிட்டு விட்டார் பொன்னையன். அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை உறுதிப்படுத்தவே அவர் கடும் சட்டப்போராட்டங்களை எதிர்கொண்டு வரும் வேளையில் பிரதமராகும் தகுதி உள்ளதாக பேசி லைம்லைட்டை திருப்பியிருக்கிறார் பொன்னையன்.

இப்படித்தான் கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி மோடியா இந்த லேடியா என அவரை பேச வைத்தனர். இப்போது எடப்பாடி பழனிசாமியை பிரதமராகும் தகுதி இருப்பதாக பேச ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications