பொன்னேரி பிரியாவின் ஸ்கெட்ச்.. நடுரோட்டில் அலறிய காதலன் கோபாலகிருஷ்ணன்.. சென்னை ரோட்டில் ட்விஸ்ட்
சென்னை: சென்னையில் உள்ள ரவுடியுடன் சேர்ந்து கள்ளக்காதலனை வெட்டிக் கொலை செய்த பெண்ணை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதல் விவகாரங்கள் பொதுவாக கொலை அல்லது தற்கொலையில் தான் முடிகின்றன. பெரும்பாலும் கொலையில் தான் முடிகிறது. ஒருசில சமயங்களில் மட்டுமே தற்கொலையில் முடிகிறது. திருமணத்தை மீறிய இந்த உறவு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, பாலாஜி நகரில் 27 வயதாகும் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். திருமணமாகாத கோபாலகிருஷ்ணனுக்கு சிவன் கோவில் தெருவை சேர்ந்த பிரியா (25) என்ற திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதனால் ஒரு கட்டத்தில் பிரியாவின் போக்கு கணவர் லட்சுமணனுக்கு தெரியவந்ததால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். ஒரு கட்டத்தில் கணவர் லட்சுமணன் தனது மனைவியின் வீட்டுக்கு வருவதை நிறுத்தி விட்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் எப்போதாவது லட்சுமணன் பிள்ளைகளை மட்டும் பார்த்து சென்று வந்துள்ளார்.
கணவர் வீட்டுக்கு வராததால் பிரியா கோபாலகிருஷ்ணனுடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்து உல்லாசமாக இருந்து வந்தாராம். இந்நிலையில் பிரியாவுக்கு சென்னையை சேர்ந்த ரவுடி ஒருவருடன் பிரியாவிற்கு பின்னாளில் தொடர்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் கள்ளக்காதலன் கோபாலகிருஷ்ணனுக்கு தெரிய வந்துள்ளது. ஏற்கனவே கணவனை கழட்டிவிட்ட பிரியா அடுத்ததாக கோபாலகிருஷ்ணனையும் கழட்டிவிட திட்டமிட்டுள்ளார். இதனிடையே கோபாலகிருஷ்ணன் அடிக்கடி பிரியாவுடன் சென்னை ரவுடியுடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து கேட்டு வற்புறுத்தி உள்ளார. ஒரு கட்டத்தில் பிரியா கோபாலகிருஷ்ணனுடன் பேசுவதை அடியோடு நிறுத்திவிட்டார்.
இந்நிலையில் பிரியாவுக்கு போன் செய்த கோபாலகிருஷ்ணன் தன்னுடன் தொடர்பில் இருக்க வேண்டும், இல்லை என்றால் கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளாராம். இதனால் கடும் கோபம் அடைந்த பிரியா, கோபாலகிருஷ்ணனை தீர்த்து கட்ட முடிவு செய்து இதுகுறித்து சென்னையில் உள்ள ரவுடியான மற்றொரு கள்ளக்காதலனிடம் கூறியிருக்கிறார். பிரியா மீது ஆசையில் இருந்த ரவுடி, கோபாலகிருஷ்ணனை கொலை செய்ய தன்னுடன் நண்பர்களான 3 பேரை கூட்டாளிகளாக சேர்த்து கொண்டார்.
ரூ.6000 நிவாரணத்திற்கான டோக்கனில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் என்ன? சென்னை மக்கள் அறிய வேண்டியவை
புதன்கிழமை இரவு பிரியா, சென்னையை சேர்ந்த ரவுடி மற்றும் 3 கூட்டாளிகள் ஆகியோர் 2 மோட்டார் சைக்கிளில் கோபாலகிருஷ்ணனை தேடி அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்கள். கோபாலகிருஷ்ணன் நண்பர்களை பார்க்க பொன்னேரி நகராட்சி அலுவலகம் அருகே உள்ள புளியந்தோப்பு என்ற பகுதிக்கு சென்றதை அறிந்தனர்.
பின்னர் பொன்னேரி நகராட்சி அருகே நின்று கொண்டிருந்த கோபாலகிருஷ்ணனை, சென்னையை சேர்ந்த ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். அதனை தொடர்ந்து பிரியா தனது கூட்டாளிகளுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து பொன்னேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்
இதையடுத்து சம்பவ இடத்துக்கு உடனே வந்த பொன்னேரி போலீசார் இறந்து கிடந்த கோபாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை பிடிக்க அனைத்து காவல் நிலையங்களிலும் தகவல் கொடுத்தனர். உடனடியாக சென்னை, திருவள்ளூர் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.
சென்னை-செங்குன்றம் சாலையில் புழல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்த நிலையில்,அந்த வழியாக சென்ற பிரியா மற்றும் கூட்டாளிகள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். போலீசார் பிரியாவை மடக்கி பிடித்தனர். இதையடுத்து புழல் போலீசார் பிரியாவை பொன்னேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிரியாவை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய 4 பேரை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications