கல்வி வள்ளல் பூண்டி துளசி அய்யா வாண்டையார் மரணம் - டிடிவி தினகரன் இரங்கல்
காங்கிரஸ் முன்னாள் எம்பி துளசி அய்யா வாண்டையார் சென்னையில் காலமானார். அவரது உடல் சொந்தஊரான பூண்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
சென்னை: முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், தீவிர காந்திய பற்றாளரும், டெல்டா மாவட்டங்களில் ஆயிரமாயிரம் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்வில் கல்வி ஒளியேற்றி வைத்த கல்வி வள்ளலுமான பெரியவர் திரு.கே.துளசி அய்யா வாண்டையார் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன் என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் மிக பெரிய குடும்பமாக இருப்பது பூண்டி வாண்டையார் குடும்பம். கல்வி வள்ளலாகவும் திகழும் துளசி அய்யா வாண்டையார், காந்தியின் தீவிர சீடராவார். 93 வயதில் இன்று சென்னையில் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான பூண்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

துளசி அய்யா வாண்டையார் மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், " முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், தீவிர காந்திய பற்றாளரும், டெல்டா மாவட்டங்களில் ஆயிரமாயிரம் ஏழை- எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்வில் கல்வி ஒளியேற்றி வைத்த கல்வி வள்ளலுமான பெரியவர் திரு.கே.துளசி அய்யா வாண்டையார் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.
பழம்பெருமையும்,பாரம்பரிய சிறப்பும் மிக்க குடும்பத்தின் வழித்தோன்றலாக இருந்தாலும் 'நான் ஒரு விவசாயி' என்று சொல்வதில் எப்போதும் பெருமிதம் கொண்டவர். 'ஒரு மனிதனுக்கு எளிமை, நேர்மை, ஆளுமை ஆகிய மூன்றும் இருக்க வேண்டும்' என்று வலியுறுத்திய துளசி அய்யா அவர்கள்அதன்படியே வாழ்ந்தும் காட்டியவர்.
துளசி அய்யா வாண்டையாரின் மகன் வழிப் பேரன் ராமநாதனுக்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகளுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. சில வாரங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் துளசி அய்யா வாண்டையார் இன்று காலமானார்.
தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றியதோடு அரசியல், விவசாயம்,கல்வி,சமூகம், இலக்கியம் என பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். அன்னாரது மறைவால் வாடும் அன்புக்குரிய திரு.டி.கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
பூண்டி துளசி அய்யா வாண்டையாரின் மகன் வழிப் பேரன் ராமநாதனுக்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகளுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் துளசி அய்யா வாண்டையார் உடல்நல குறைவால் இன்று காலமாகியுள்ளார். அவரது மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications