செல்போன்..எஸ்டிபிஐ நெல்லை முபாரகிற்கு எதிராக சதி! என்ஐஏ ரெய்டின் பின்னணி -பூவுலகு சுந்தர்ராஜன் பகீர்
சென்னை: என்.ஐ.ஏ சோதனையில் எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக்கின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதன் பின்னணியில் அரசின் சதி இருப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன், "தேர்தல் நெருங்க நெருங்க சமூகத்தில் பதற்றதை ஏற்படுத்தி அதன் மூலம் ஆதாயம் தேட முயல்வது என்பது பாஜகவின் யுக்தி. இதன் ஒரு கூறாக எஸ்டிபிஐ கட்சியின் முன்னணி தோழர்கள் வீடுகளில் சோதனையை நேற்றைய தினம் என்ஐஏ அமைப்பு மேற்கொண்டுள்ளது, இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

ஏற்கனவே ஒன்றிய அரசின் பல அமைப்புகள் பாஜகவின் ஏஜெண்டுகள் போல் செயல்படுவதை நாட்டு மக்கள் அறிந்துள்ளனர், அதுவும் குறிப்பாக இப்போது மணிப்பூரில் நடைபெறும் இன அழிப்பிற்கு எதிராக தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள எழுச்சியை மடைமாற்ற தோழர் நெல்லை உள்ளிட்ட தோழர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றுள்ளதை எல்லோரும் அறிவோம்.
இப்படிபட்ட மிரட்டல்கள் மூலம் தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என்று ஒன்றிய அரசு கனவு கண்டால் ஏமாற்றமே மிச்சமாகும். தோழர் முபாரக்கின் கைபேசியை கைபற்றி சென்றுள்ளது என்ஐஏ. பீமா கோரேகான் வழக்கில் மென்பொருளை பயன்படுத்தி அரச கட்டமைப்பு செய்த சதிவேலையால் சுதா பரத்வாஜ் உள்ளிட்ட பலர் கைதானதை இங்கே நினைவில் கொள்வோம்.
அதைப் போன்ற ஒரு விஷயத்தை சித்தரிக்கவே ஒன்றிய அரசு முபாரக்கின் கைபேசியை எடுத்துச்சென்றுள்ளது என்பது நிச்சயம். இந்த அத்துமீறலை வன்மையாக கண்டிக்கிறோம். தோழர்களோடு தோழமையோடு நிற்கிறோம்." என்று குறிப்பிட்டு இருக்கிறார். கடந்த ஞாயிறு அன்று தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் எஸ்டிபிஐ கட்சி பிரமுகர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது.
குறிப்பாக நெல்லை மாவட்டம் மேலபாளையத்தில் உள்ள எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டிலில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனை முடிந்த பின்னர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "ஆளும் பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. கட்சி சமரசமின்றி தொடர்ந்து போராடிவருகிறது. பாஜக அரசுக்கு சிம்ம சொப்பனமாக அதன் மக்கள்விரோத நடவடிக்கைகளை தோலுரிக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சியை பழிவாங்கும் நடவடிக்கையை அதன் ஏவல் அமைப்புகள் மூலமாக மேற்கொண்டுவருகின்றது.
அதன் ஒரு பகுதியாக எனது வீட்டிலும், கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது பாரூக் அவர்களின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் உள்ள இஸ்லாமியர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. மூலம் சோதனைகளை நடத்தியுள்ளது.
இந்த சோதனையில் எந்த ஆவணமும் அவர்களுக்கு கிடைக்காத நிலையில், எனது போன் மற்றும் ஒன்றுமில்லாத சில பேப்பர்களை மட்டும் அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

அதேபோல் எஸ்.டி.பி.ஐ. தேசிய செயற்குழு உறுப்பினர் பாரூக் அவர்களின் வீட்டிலும் எதுவும் கிடைக்காமல் வெறும் கையோடு திரும்பிச் சென்றுள்ளனர். அதிகாலை முதல் ஊடக பரபரப்பை ஏற்படுத்தியதை தவிர வேறு எந்த ஒன்றையும் அவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. மக்கள் நலனுக்கான அரசியலில் வீரியமாக ஈடுபடும் எஸ்.டி.பி.ஐ. கட்சியை பொய்யான குற்றச்சாட்டில் சோதனைகளை நடத்தி, வன்முறையாளர்களாக மக்கள் மத்தியில் களங்கப்படுத்தும் எண்ணமே இந்த சோதனையாகும்.
இத்தகைய அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. எஸ்.டி.பி.ஐ. கட்சி அதன் வலுவான ஜனநாயக நடவடிக்கைகளின் மூலமாக பாஜக அரசின் அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடிக்கும். ஒருபோதும் நெருக்கடிகளின் மூலமாக அதன் அரசியல் செயல்பாடுகளை ஒடுக்கிவிட முடியாது. சோதனைகள் மூலம் இன்னும் வீரியமாகவே களமாடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று பேசினார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications