Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சில் இரண்டு சர்ச்சை.. "கொச்சைப்படுத்தி பேசலாமா?" கொந்தளித்த சுந்தர்ராஜன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்லைன் ரம்மி நிறுவன முதலாளிகளின் நலனைப் பாதுகாக்க பா.ஜ.க. தூண்டுதலில் செயல்பட்டு வரும் ஆளுநர் ரவி, தன்னெழுச்சியாக நடந்த மக்கள் போராட்டத்தை, இன்று வேதாந்தா நலனுக்காக கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார் என பூவுலகின் நண்பர் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்

ஆளுநர் ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் அதற்கு நிராகிரிப்பு என்றே பொருள் என்றும் அரசியல் அமைப்பை பாதுகாப்பதே ஆளுநரின் கடமை என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. அதேபோல் நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட்டை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதும் சர்ச்சையாகி உள்ளது.

poovulagin nanbargal Sundarrajan condemns Tamil Nadu Governor RN Ravis Speech

சென்னை கிண்டி ராஜ்பவனில் இந்திய குடிமையியல் பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 'எண்ணித் துணிக' என்ற தலைப்பில் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுடன் பேசினார்.

அப்போது அவரிடம், வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்கள் மூலமாக வருகிற நிதிகளை முறைப்படுத்த வேண்டிய தேவை என்ன இருக்கிறது என்று மாணவர் ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், "தமிழ்நாட்டில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்திலும் இதுபோன்ற நிதிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட்டை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் ஜனநாயகப்படி ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். இந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் வருத்தமான நிகழ்வு.

வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டுக்கு ரூ.250 கோடி வரை வெளிநாட்டு நிதி நாட்டுக்கெதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதியை கட்டுப்படுத்த மத்திய அரசு எப்சிஐ நிதியை முறைப்படுத்தி உள்ளது . சட்டசபை தீர்மானங்களை ஆளுநர் நிலுவையில் வைத்தால் நாகரீகமாக நிராகரிப்பதாக பொருள்.

poovulagin nanbargal Sundarrajan condemns Tamil Nadu Governor RN Ravis Speech

நிலுவையில் வைப்பது நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்று பொருள் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வே கூறுகிறது. பொதுப்பட்டியலில் உள்ளவைக்கு மத்திய அரசு சட்டம் இயற்றாவிடினும் மாநில அரசு சட்டம் இயற்றலாம். ஆனால் மாநில அரசின் சட்டம் மத்திய அரசின் சட்டத்துடன் பொருந்த வேண்டும். பேரவையின் தீர்மானம் அரசியல் அமைப்பின் விதிக்கு உட்பட்டு இருக்கிறதா என்று கண்காணிக்க வேண்டும் " இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

ஆளுநரின் இந்த பேச்சுக்கு பூவுலகின் நண்பர் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆன்லைன் ரம்மி நிறுவன முதலாளிகளின் நலனைப் பாதுகாக்க பா.ஜ.க. தூண்டுதலில் செயல்பட்டு வரும் ஆளுநர் ரவி, தன்னெழுச்சியாக நடந்த மக்கள் போராட்டத்தை இன்று வேதாந்தா நலனுக்காக கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார்.

அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையிலே தூண்டுதலினால் உண்டான போராட்டம் என்றோ, வெளிநாட்டு நிதியைப் பெற்றுக்கொண்டு நடந்த போராட்டம் என்றோ எங்கும் குறிப்பிடப்படவில்லை.தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டின் நலனுக்கெதிராகத் தொடர்ந்து செயல்படும் ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்" என கூறியுள்ளார். மேலும் ஆளுநர் தனது பேச்சுக்கு ஆதாரங்களை தர வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி பதிவிட்டுள்ள ரீட்விட்டும் செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+