காந்தி ஜெயந்தி நாளில் அப்படி ஒரு சேவை .. கையும் களவுமாக சிக்கிய டிக்-டாக் பிரபலம் தென்றல் சாந்தி
சென்னை: காந்தி ஜெயந்தியன்று மது பாட்டில்கள் விற்பனை செய்த டிக்-டாக் பெண் பிரபலமான தென்றல் சாந்தி கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் "டிக் டாக்" பிரபலமாக இருந்த காலத்தில் அதிகமாக வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாக வலம் வந்த தென்றல் சாந்தி, திருட்டுதனமாக கள்ள சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்ட புகாரில் திருவள்ளூர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுவாகவே மதுக்கடைகள் மூடப்படும் நாளில், சிலர் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்பார்கள். அப்படி பதுக்கி வைத்து விற்பனை செய்வோரை போலீசார் சோதனை நடத்தி கைது செய்வது வழக்கம் ஆகும். தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திருவள்ளூர் தினம், வள்ளலார் தினம், மிலாடி நபி, மே 1, ஆகஸ்ட் 15, ஜனவரி 26 மற்றும் அக்டோபர் 2 உள்பட பல்வேறு நாட்களில் மூடப்படுவது வழக்கம். இதேபோல் தேர்தல் நேரத்திலும் டாஸ்மாக் உள்பட அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி அன்று மாநிலம் முழுவதுமே மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்தனர். அப்படி விற்பனை செய்த பலரை போலீசார் கைது செய்தனர். அப்படித்தான் காந்தி ஜெயந்தியன்று மது பாட்டில்கள் விற்பனை செய்த டிக்-டாக் பெண் பிரபலமான தென்றல் சாந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கோளூர் காலனியில் வசித்து வருபவர் 32 வயதாகும் தென்றல் சாந்தி . இவர் சமூக வலைதளங்களில் "டிக் டாக்" பிரபலமாக இருந்த காலத்தில் அதிகமாக வீடியோக்களை வெளியிட்டு மிகவும் பிரபலமான நபராக வலம் வந்தார். கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் திருட்டுதனமாக கள்ள சந்தையில் மது விற்பனையில் ஈடுபடுபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தார்கள்.
டிக்டாக் பிரபலமான தென்றல் சாந்தி மதுபாட்டில்களை வாங்கி கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பதாக பொன்னேரி மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு பொதுமக்கள் சிலர் ரகசிய தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற மதுவிலக்கு போலீசார் தென்றல் சாந்தி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில் அவர் மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்றது தெரிய வந்தது. இதையடுத்து தென்றல் சாந்தியை கைது செய்த பொன்னேரி மதுவிலக்கு பிரிவு போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் கோளூர் பகுதி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications