"செய்தியாளர் பின்னால் ஏன் ஓடுகிறீர்கள்!" போலீஸை கேட்ட நீதிபதிகள்! சவுக்கு சங்கர் விடுதலை
சென்னை: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கிய நிலையில் அவர் இன்றைய தினம் புழல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
சவுக்கு மீடியா எனும் யூடியூப் சேனலின் உரிமையாளர் சவுக்கு சங்கர், ஒரு தயாரிப்பாளரை மிரட்டி பணம் கேட்டு தாக்கியதாக வந்த புகாரின் பேரில் கடந்த 13 ஆம் தேதி ஆதம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர்.

மேலும் சென்னை நந்தனம் பகுதியில் ஹரிச்சந்திரன் எனும் பார் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாக வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. சவுக்கின் ஆதம்பாக்கம் அபார்ட்மென்ட்டிற்கே வந்த போலீஸார் கதவை உடைத்து சங்கரை கைது செய்தனர்.
இதற்கு பல பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்குமாறு அவரது தாய் கமலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், பி.தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது "நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. வசிக்கும் இடத்தை போலீஸாருக்கு தெரிவித்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சவுக்கு சங்கருக்கு மார்ச் 25 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
அப்போது நீதிபதிகள் மேலும் கூறுகையில், நீங்கள் (காவல் துறை) ஏன் பத்திரிகையாளர் பின்னால் ஓடுகிறீர்கள்? புகார் செய்த அடுத்த நாள் அதிகாலையிலேயே சவுக்கு சங்கரை கைது செய்ததன் நோக்கம் என்ன? கருத்து வேறுபாடு என்பது ஒரு ஜனநாயக உரிமை. சட்டசபையில் கருத்து வேறுபாடு மதிக்கப்படுகிறது.
கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துபவர்கள் யாராவது துன்புறுத்தப்பட்டால் நீங்கள் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிறீர்கள். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விரும்பினால் அவர்கள் அவதூறு வழக்கு மூலம் சிவில் நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவை பெறலாம்.

நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்ட வாதங்களை கவனத்தில் கொண்டும் சவுக்கு சங்கரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதிக்கு முன்பு அவர் அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை புழல் சிறையிலிருந்து சவுக்கு சங்கர் விடுதலையாகி வெளியே வந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications