பகுஜன் சமாஜ் ஒருங்கிணைப்பாளராக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நியமனம்.. இவரை பற்றி தெரியுமா?
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞரான பொற்கொடி, ஆம்ஸ்ட்ராங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டவர். பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து பணியாற்றியவர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்து வந்த ஆம்ஸ்ட்ராங் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி பொற்கொடி, பிஎஸ்பி கட்சியின் மாநில தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் புதிய மாநிலத் தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு பொறுப்பு: ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில துணை தலைவராக இளமான் சேகர், மாநில பொருளாளராக கமலவேல் செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பொற்கொடி: ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது. வழக்கறிஞரான பொற்கொடி, ஆம்ஸ்ட்ராங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.
பட்டியலின மக்களின் உரிமைக்காக பொது வாழ்க்கையில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங், திருமணம் செய்துகொண்டால் தன்னுடைய தீவிர அரசியல் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் என்று கருதினார். மேலும், தனது அரசியல், சமூக செயல்பாடுகள் காரணமாக தன் உயிருக்கு ஆபத்து வரலாம் என்பதையும் உணர்ந்திருந்தார். எனவே, திருமணமே செய்துகொள்ள வேண்டாம் என்ற முடிவில் இருந்தார் ஆம்ஸ்ட்ராங்.

ஆம்ஸ்ட்ராங் வகித்த பகுஜன் சமாஜ் தமிழ்நாடு மாநில தலைவர் பதவியில் வழக்கறிஞர் ஆனந்தன்.. யார் இவர்?
வழக்கறிஞர்: திருநாவுக்கரசு - விஜயலட்சுமி தம்பதிக்கு மூத்த மகளாகப் பிறந்த பொற்கொடி சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக செயல்பட்டு வந்தார். அண்ணல் அம்பேத்கர் மீது கொண்ட பற்றினால் அவரது வழியில் பொற்கொடியும் பௌத்த மதத்தைத் தழுவினார்.
பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகிலேயே உருவாக்கி இருந்த புத்த விகாருக்கு பொற்கொடியும் அடிக்கடி வந்து செல்வார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆம்ஸ்ட்ராங்கின் சமூகச் செயல்பாடுகளும், பௌத்த பண்பாட்டில் கொண்ட ஈடுபாடும் பொற்கொடியை மிகவும் கவர்ந்தது. ஒரு கட்டத்தில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கை திருமணம் செய்துகொள்ள விரும்பினார்.
20 வயது வித்தியாசம்: தனது தந்தை மூலம் ஆம்ஸ்ட்ராங்கிடம் பேசி அவரது சம்மதத்தையும் பெற்றார். முதலில் தனது பொது வாழ்க்கையில் உள்ள சவால்களைக் கூறி திருமணத்திற்கு மறுத்த ஆம்ஸ்ட்ராங் பொற்கொடியும் அம்பேத்கர் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர் என்பதால் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார். 44 வயதில் ஆம்ஸ்ட்ராங்கின் திருமணம் நடைபெற்றது. ஆம்ஸ்ட்ராங்கிற்கும் பொற்கொடிக்கும் சுமார் 20 வயது வித்தியாசம்:
2016ஆம் ஆண்டு ஆம்ஸ்ட்ராங் - பொற்கொடி இருவருக்கும் பௌத்த மத வழக்கப்படி திருமணம் நடைபெற்றது. சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித சார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் தமிழகத்தின் தலித் இயக்கத் தலைவர்களான திருமாவளவன், பூவை. ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கட்சி பணியாற்றிய பொற்கொடி: திருமணத்துக்குப் பின் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பெங்களூரில் நடைபெற்ற புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் - பொற்கொடி தம்பதிக்குப் பிறந்த குழந்தைக்கு அம்பேத்கரின் அரசியல் குருவான சாவித்திரி பாய் பூலேவின் பெயரான “சாவித்ரி பாய்” என்று பெயர் சூட்டினார்.
திருமணமான பிறகு ஆம்ஸ்ட்ராங்குடன் சேர்ந்து பொற்கொடியும் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வழக்கறிஞர் பொற்கொடி, பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட நிலையில், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சியினர் மற்றும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், பொற்கொடி, தான் மாநில தலைவராக விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்தே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக வழக்கறிஞர் பி.ஆனந்தன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு












Click it and Unblock the Notifications