பண்ணை வீட்டில் சிக்கிய நடிகை.. அரைகுறை டிரஸ்ஸில் 15 பேர்.. போலீஸ் அதிரடி.. ஈசிஆர் ரோட்டில் பரபரப்பு
பண்ணை வீட்டில் மதுவிருந்தில் கலந்து கொண்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது
சென்னை: சென்னை ஈசிஆர் ரோட்டில் பண்ணை வீட்டில் நடிகையுடன் மதுவிருந்து நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இதையடுத்து அந்த பண்ணை வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ராதாகிருஷ்ணா அவென்யூ, எல்ஆர் பார்ம்ஸ் சாலையில் சுகுணா கார்டன் என்கிற பண்ணை வீடு உள்ளது..
இந்த பண்ணை வீட்டில் வார இறுதி நாட்களில் எப்போதுமே விருந்து, விழா என நிகழ்ச்சிகள் களை கட்டும்.. பிறகு லாக்டவுன் போட்டுவிடவும், இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் குறைந்துவிட்டது.

ரகசிய தகவல்
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு, இந்த வீட்டில் மது பார்ட்டி நடப்பதாகவும், 30க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் அதில் கலந்து கொண்டுள்ளனர் என்றும், கானத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது... இதையடுத்து போலீசாரும் அந்த பண்ணை வீட்டை மறைந்திருந்து கண்காணித்தனர்..

சொகுசு பங்களா
அந்த பண்ணை வீடு சொகுசு பங்களா போல இருந்ததையும், மிகப்பெரிய அளவில் மது விருந்து நடந்து கொண்டிருந்ததையும் உறுதி செய்தன. அதிரடியாக உள்ளே நுழைந்தபோது, அரை குறை டிரஸ்களுடன் பெண்கள் போதையில் தள்ளாடி கிடந்துள்ளனர்.. ஆண்கள், பெண்கள் சேர்ந்து டான்ஸ் ஆடி கொண்டிருந்திருக்கிறார்கள்.. போலீசார் உள்ளே சென்று அந்த பார்ட்டியை தடை செய்தனர்.. அந்த விருந்து நடத்துபவர் யார் என்று விசாரணையில் இறங்கினர்..

நடிகை
அப்போதுதான் ஏற்பாடு செய்தது ஒரு பெண் என்பதும் நடிகை கவிதா ஸ்ரீ -தான் இந்த பார்ட்டி நடத்த உடந்தையாக இருந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.. இதையடுத்து, கவிதாஸ்ரீ மற்றும் பார்ட்டியில் டான்ஸ் ஆடிய பெண்கள் என மொத்தம் 16 பேரையும் வார்ன் செய்து, பண்ணை வீட்டிலிருந்து வெளியேற்றினர்..

கட்டணம்
இந்த பண்ணை வீட்டில் சினிமா ஷூட்டிங் எடுப்பது வழக்கமாம்.. இதைதான், ரூ.15 ஆயிரத்திற்கு வாடகைக்கு எடுத்து பார்ட்டி நடத்தி உள்ளனர்.. இதற்காக 10 பெண்களை ஆபாச நடனம் ஆடவும் அழைத்து வந்துள்ளனர்... இப்படி டிரிங்ஸ் பார்ட்டியில் கலந்து கொள்வதற்கு ஒரு ஆணுக்கு 10 ஆயிரம் ரூபாய் கட்டணமாம்..

புரோக்கர்
அதன்படிதான், அத்தனை ஆண்களும் அந்த பார்ட்டியில் பணம் கொடுத்து கலந்து கொண்டுள்ளனர்.. பிறகு, ஸ்ரீஜித்குமார் என்ற புரோக்கர் உட்பட 15 பேரை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து பிறகு விடுதலை செய்தனர்.. ஊரடங்கின்போது அரசு உத்தரவை மீறியது உட்பட 4 பிரிவின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

சீல்
பிறகு, நடந்த சம்பவம் குறித்து கானத்தூர் விஏவுக்கு போலீசார் தகவல் அளித்தனர்.. அதனடிப்படையில் விரைந்து வந்த விஏஓ அதிகாரி சம்பந்தப்பட்ட பண்ணை வீட்டை பூட்டி சீல் வைத்தார்... இந்த சம்பவம் குறித்து கானத்தூர் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈசிஆர் ரோட்டில் பண்ணை வீட்டில் நடிகை சிக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications