"யாரது?.. நிர்வாணமாக கட்டிவைத்து.. பிறப்புறுப்பை அறுப்பேன்".. வீடியோ போட்ட வீரலட்சுமி.. பரபரப்பு
கி. வீரலட்சுமி தனக்கு வந்த ஆபாச வீடியோ குறித்து போலீசில் புகார் தந்துள்ளார்
சென்னை: "எனக்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபரை 3 நாளில் கைது செய்யாவிட்டால், நானே அந்த நபரை கண்டுபிடித்து தூக்கிட்டு வந்து, நிர்வாணமாக பல்லாவரம் மார்க்கெட்டில் கட்டிவைத்து பிறப்புறுப்பை அறுத்து, அதை சோஷியல் மீடியாவில் வெளியிடுவேன்" என கி.வீரலட்சுமி தெரிவித்துள்ள சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video

யார் இந்த வீரலட்சுமி? என்ன நடந்தது?
ராமாபுரத்தை சேர்ந்தவர் இவர்.. 35 வயதாகிறது.. தமிழர் முன்னேற்றப்படை என்ற அமைப்பின் நிறுவனர் ஆவார்.. தேசிய தலைவர் பிரபாகரன் சிலை அகற்றிய விவகாரம், ஆந்திராவில் தமிழர் படுகொலை, குஷ்பு வீடு முற்றுகை... என அன்றைய அரசியல் பரபரப்பு நிகழ்வுகளின் மூலம் மீடியாக்களின் கவனத்தை ஈஸியாக கவர்ந்தவர். இதற்கு பிறகு தமிழக மக்களின் பல பிரச்சனைகளில் தலையிட்டு போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தவர்.

பல்லாவரம்
இவர் ராமாபுரம் ஈஸ்வரன் கோயில் தெருவில் தற்போது வசித்து வருகிறார்.. சென்னை பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் மை இந்தியா பார்ட்டி சார்பிலும் போட்டியிடுகிறார். அதனால் பம்மல் தொகுதியில் தீவிர பிரச்சாரத்திலும் இறங்கி வருகிறார்.. அப்படித்தான் 2 நாட்களுக்கு முன்பு தொகுதியில் பிரச்சாரம் செய்யும்போது, திடீரென சில வீடியோக்கள் இவரது வாட்ஸ்அப் நம்பருக்கு வந்துள்ளதாக தெரிகிறது.. அவை எல்லாமே ஆபாச வீடியோக்கள் போலும்.. இதை பார்த்து பதறினார் வீரலட்சுமி, அதை அனுப்பியது யார் என்றும் தெரியவில்லை..

வீடியோக்கள்
இதனால், உடனடியாக சங்கர் நகர் போலீசில் இது பற்றி புகார் தந்தார்.. அந்த புகாரில், "சட்டசபை தேர்தலில், மை இந்தியா கட்சியின் சார்பில், பல்லாவரம் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன்... 17ம் தேதி, வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு சென்றபோது, என் வாட்ஸ்அப் நம்பருக்கு சில வீடியோக்கள் வந்தன.. அதில், அருவருக்கத்தக்க வகையிலும், பாலியல் வன்புணர்ச்சி எண்ணத்தோடும், அசிங்கமான வீடியோக்கள் இருந்தன... இது போன்ற வீடியோக்களை அனுப்பி, மன உளைச்சலை ஏற்படுத்தி, தேர்தல் பணி செய்ய விடாமல் தடுத்த நபரை கண்டுபிடித்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

யார் அது?
இந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.. இந்த நிலையில், வீரலட்சுமி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.."எனக்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபர் யார் என்று தெரியவில்லை.. அவரை 3 நாட்களில் போலீசார் கைது செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் நானே அந்த நபரை கண்டுபிடித்து, தூக்கிட்டு வந்து நிர்வாணமாக பல்லாவரம் மார்க்கெட்டில் கட்டி வைத்து, பிறப்புறுப்பையும் அறுத்து, சோஷியல் மீடியாவிலும் வெளியிடுவேன்" என கோரிக்கை விடுத்துள்ளார்.

வீரலட்சுமி
தமிழக டிஜிபி திரிபாதி, தமிழக தேர்தல் ஆணையர், சென்னை கமிஷனர் ஆகியோருக்கு இந்த வேண்டுகோளை வீரலட்சுமி வெளியிட்டுள்ளார்.. ஏற்கனவே அரசியம் களம் தாறுமாறாக தகித்து கிடக்க.. வீரலட்சுமியின் இந்த வீடியோ பெரும் பரபரப்பை கிளப்பி கொண்டு இருக்கிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications