அஞ்சலக சேமிப்பு திட்டம்.. போஸ்ட் ஆபீஸ் சேமிப்புகளில் இவ்வளவு பலன்களா.. மத்திய அரசின் வரப்பிரசாதம்
சென்னை: அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் ஏன் அதிகமாக இணைய ஆர்வம் காட்டுகிறார்கள் தெரியுமா? வாடிக்கையாளர்களின் ஆதரவை சிறு சேமிப்பு திட்டங்கள் தொடர்ந்து பெற என்ன காரணங்கள் தெரியுமா?
சிறு சேமிப்பு திட்டங்கள் அனைத்துமே பரவலாக மக்களின் ஆதரவை பெற்றவை.. இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுபவை.. அஞ்சல் அலுவலகத் திட்டங்கள், அனைத்துமே, மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசால் தொடங்கப்பட்டவைதான் இந்த சிறு சேமிப்பு திட்டங்கள் அல்லது தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள்.

சேமிப்பு கணக்கு: வங்கியில் எப்படி சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறோமோ, அதுபோல, அரசுக்கு சொந்தமான தபால் நிலையங்களிலும் சேமிப்பு கணக்கு வைத்துக் கொள்ளலாம். இதற்கு தபால் நிலையங்களிலேயே சிறுசேமிப்பு திட்டங்கள் நிறைய இருக்கின்றன.
பெண் குழந்தைகள் முதல், வயதானவர்கள் வரைக்குமான திட்டங்கள் இதில் உண்டு. சிறந்த வருமானத்தை மட்டும் பெறுவதுடன், நீங்கள் முதலீடு செய்த பணமும் பாதுகாப்பாக இருக்கும்படியான உத்தரவாதமும் தரப்படுகிறது. பணத்துக்கு உத்தரவாதமும் உண்டு. 60 வயதுக்கு மேல் நிம்மதியாகவும், கவலையின்றியும் வாழலாம். யார் தயவையும் எதிர்பார்க்க தேவையில்லை. இதனால் தன்னம்பிக்கை பெருகுகிறது.
வருங்கால வைப்பு நிதி: இந்த திட்டத்தின் கீழ், தபால் அலுவலக சேமிப்பு கணக்கு, பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ், சுகன்யா சம்ரித்தி யோஜனா, 5 ஆண்டு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், ஐந்து ஆண்டு தொடர் வைப்பு கணக்கு போன்ற 9 வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த 9 வகையான திட்டங்களுக்குமே மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. 9 வகையான திட்டங்களும், ஒவ்வொரு வகையில் பலன் தரத்தக்கது.. இவைகளில் இணைவதற்கு அந்த திட்டங்களுக்கேற்றவாறு, விதிமுறைகள் உள்ளன.
ஆனால், சில அடிப்படை விஷயங்கள் மாறாதது.. குறிப்பாக, இந்த சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதமானது ஒவ்வொரு காலாண்டும் அரசால் நிர்ணயிக்கப்படும். பாதுகாப்பும், உத்தரவாதமும், பணப்பலனும், வட்டி விகிதமும், ஓய்வூதிய பலனும், முதலீட்டாளர்களுக்கு பன்மடங்கு நன்மையை தரக்கூடியது.
வட்டி விகிதங்கள்: கடந்த 2022-23 நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான (ஏப்ரல் 2022 முதல் ஜூன் 2022) சிறுசேமிப்பு வட்டி விகிதங்கள் குறித்த அறிக்கையை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டிருந்தது.. அதில், சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்று அறிவித்துவிட்டது. அதனால், தபால் அலுவலக சேமிப்பு கணக்குகளுக்கான ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடர்ந்து நீடிக்கும் என்றும் கூறிவிட்டது.
இந்நிலையில், ஏப்ரல்-ஜூன் 2023 காலாண்டில் பெரும்பாலான தபால் நிலைய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 0.7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.. இதுகுறித்து நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது.
சேமிப்பு திட்டங்கள்: அதில், பிபிஎஃப் மற்றும் சேமிப்பு டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் முறையே 7.1 சதவீதம் மற்றும் 4 சதவீதமாக வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், மற்ற சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.1 சதவீதம் முதல் 0.7 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் ஜூன் 30, 2023 வரையிலான காலகட்டத்தில் தேசிய சேமிப்பு சான்றிதழின் (என்எஸ்சி) வட்டி விகிதம் 7 சதவீதத்திலிருந்து 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதேபோல, பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக தொடங்கப்பட்ட சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி திட்டத்தின் வட்டி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆர்வம்: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் கிசான் விகாஸ் பத்ரா (கேவிபி) ஆகியவற்றின் வட்டி விகிதம் முறையே 8.2 சதவீதம் (8 சதவீதத்தில் இருந்து) மற்றும் 7.5 சதவீதம் (7.2 சதவீதம் வரை) அதிகரித்துள்ளது. இதன்காரணமாகவே இந்த திட்டங்களில் இணைய பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications