Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பவர் பத்திரம்.. சொத்து வாங்க போறீங்களா.. பத்திரப்பதிவு செய்ய இதெல்லாம் அவசியம்.. நோட் பண்ணுங்க மக்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருவர் சொத்துக்களின் உரிமை மாற்றத்திற்கான பத்திரப்பதிவு செய்யும்போது, தாக்கல் செய்வதற்கு பல்வேறு ஆவணங்கள் மற்றும் சான்றுகளை சொத்து வாங்குபவர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.. அத்தகைய சில ஆவணங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

எந்த ஒரு பத்திரம் வாங்கினாலும், அதற்குரிய ஆவணங்கள் இருக்கிறதா, அந்த ஆவணங்கள் அனைத்துமே முறையாக இருக்கிறதா என்பதை படித்து பார்த்துதான் கையெழுத்து போட வேண்டும்.

Power of Attorney and What are the Major Documents required for Registration of the bond

சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட சொத்துக்களை அந்தந்த சார்பதிவாளரிடம் தாக்கல் செய்யலாம் அல்லது அந்த சார்பதிவாளர் எந்த மாவட்டப் பதிவாளரின் கீழ் பணியாற்றுகிறாரோ, அந்த மாவட்ட பதிவாளரிடம் பதிவு ஆவணத்தை தாக்கல் செய்யலாம். பதிவுத்துறை அலுவலகத்துக்கு செல்லும்போது, சில முக்கிய ஆவணங்களை கையோடு எடுத்து செல்ல வேண்டும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை: உதாரணமாக, தயாரிக்கப்பட்ட ஆவணம் அதாவது தன்னுடைய சொத்தை விற்பவரால் எழுதிக் கொடுக்கப்படும் அசல் ஆவணம் இருக்க வேண்டும்.. பட்டா மாற்றம் செய்வதற்கான விண்ணப்பம் மற்றும் அதற்கான நீதிமன்ற வில்லை தேவை.. வீடு என்றால் விற்பவர், எழுதிக்காடுப்பவர் பெயரில் உள்ள சொத்துவரி போன்ற விவரங்கள் கண்டிப்பாக தேவை..

வீடு இருந்தால், அதன் முழு விவரம் அடங்கிய படிவம், வரைபடம், மனைப்பிரிவின் அங்கீகாரம் பெற்ற நிலப்படம் தேவையாக இருக்கும். சொத்தில் கட்டுமானம் இருந்தால் "வி" படிவம் தேவை.. அது கட்டாயம் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

5 அடையாள அட்டைகள் மட்டுமே அனுமதி: சொத்தை விற்பவர் மற்றும் வாங்குபவரின் 2 போட்டோக்கள் தேவை.. அதேபோல, சாட்சிகளின் புகைப்பட அட்டைக்கான ஒரிஜினல் மற்றும் நகல்களை தாக்கல் செய்ய வேண்டும்.. இதில் அடையாள அட்டையாக நீங்கள் ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 5 வகை அடையாள அட்டைகள் மட்டும் ஏற்கப்படும் என பதிவுத்துறை அறிவித்திருக்கிறது.

பதிவுக்கட்டணம் 1000 ரூபாய்க்கு மேல் இருந்தால் கேட்பு காசோலை தேவை.. 5 லட்சத்துக்கு மேல் சொத்து மதிப்பு இருந்தால், அதை வாங்குபவர், பெறுபவர் என 2 பேரின் பான் கார்டு மிகவும் முக்கியம்.. ஒருவேளை பான்கார்டு இல்லாவிட்டால், இதற்காகவே ஒரு படிவம் உள்ளது.. அதை பூர்த்தி செய்து தர வேண்டும். அதாவது, குறைவான முத்திரை தீர்வை செலுத்த வேண்டுமானால் அதற்கு தனியாக விண்ணப்பிக்கலாம்

தடையில்லா சான்று: அதிகாரப் பத்திரம் என்றால் சாட்சிகளின் போட்டோ அடையாள அட்டைக்கான ஒரிஜினல் மற்றும் நகல்களும் தாக்கல் செய்யப்பட வேண்டும். அரசு நிலம் அல்லது இந்து அறநிலையத்துறை அல்லது வக்பு வாரியம் அல்லது இதர பதிவு செய்ய தடை கொண்ட சொத்து தொடர்பாக ஆவணங்களை தாக்கல் செய்யப்படும்போது, சம்பந்தப்பட்ட துறையின் தடையில்லா சான்று பெற்று தாக்கல் செய்யப்பட வேண்டும்...

தாய்ப்பத்திரங்கள் அல்லது தாய்ப்பத்திரங்கள் வங்கியில் இருந்தால், அதற்கான வங்கிச்சான்று சமர்ப்பிக்க வேண்டும்.. ஒருவேளை மூலப்பத்திரங்கள் தொலைந்து போயிருந்தால் அதற்கான காவல்துறையின் சான்றதழை சமர்ப்பிக்க வேண்டும்.

வாரிசு சான்றிதழ்: விவசாய நிலம் என்றால், அரசு வழங்கிய பட்டா முதலிய வருவாய்த்துறை சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். சரியான அல்லது குறைவான முத்திரை தீர்வையை ரொக்கமாகவோ அல்லது DD எடுத்தோ செலுத்தப்பட நேர்ந்தால், முத்திரை சட்டம் பிரிவு 41-ன்கீழ் அதற்கான விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். வாரிசு முறைப்படி சொத்து வந்திருந்தால், சொத்து, இந்த உரிமையாளரின் வாரிசுதான் என்பதை உறுதிசான்று வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+