அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசே துணைவேந்தரை நியமிக்க அதிகாரம்... மசோதா தாக்கல்
அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசே துணைவேந்தரை நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை: அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசே துணைவேந்தரை நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தினால் 3 உறுப்பினர்களை அரசு நியமித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்.
தமிழக சட்டசபையில் இன்று போக்குவரத்துத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

இந்தநிலையில், தமிழ்நாடு சட்டசபையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசே துணைவேந்தரை நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதாவை தாக்கல் செய்துள்ளார். துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தினால் 3 உறுப்பினர்களை அரசு நியமித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வேந்தராக தமிழக முதல்வர் இருக்கும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், துணை வேந்தரை ஆளுநருக்கு பதிலாக முதல்வரே நியமிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இந்த மசோதா மீது விவாதம் நடந்து வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.












Click it and Unblock the Notifications