பிரணாப் முகர்ஜி கடைசியாக பங்கேற்றது கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்திய சென்னை நினைவேந்தல் நிகழ்வு
சென்னை: மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடைசியாக பங்கேற்றது தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுதான்.
Recommended Video
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் பிரணாப் முகர்ஜி. அவருக்கு மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

ஆனாலும் உடல்நிலை குணமடையாத நிலை இருந்து வந்தது. ஒருகட்டத்தில் ஆழ்ந்த கோமாநிலையில் சிகிச்சை பெற்று வந்தார் பிரணாப் முகர்ஜி. இந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்ததாக மகன் அபிஜித் முகர்ஜி அறிவித்தார்.
இந்தியாவின் 40 ஆண்டுகால அரசியலின் பக்கங்களில் பிரணாப் முகர்ஜியும் நிறைந்து இருக்கிறார். தேசத்தின் நிதி, ராணுவம், வெளியுறவு என முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்தவர். பின்னர் தேசத்தின் ஜனாதிபதியாகவும் பணியாற்றினார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவர் கடைசியாக கலந்து கொண்ட பொதுநிகழ்வு என்பது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுதான்.
கடந்த ஆகஸ்ட் 7-ந் தேதியன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவீந்திரன் ஏற்பாடு செய்திருந்த, கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வீடியோகான்பரன்ஸ் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பங்கேற்று பேசினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரணாப் முகர்ஜி,
கருணாநிதி எனது 50 ஆண்டுகால நண்பர். நவீன இந்தியாவை உருவாக்கிய முக்கிய தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர். கருணாநிதி மறைவதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் நலம் விசாரித்திருந்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக நம்மைவிட்டு கருணாநிதி பிரிந்து சென்றுவிட்டார். 1967-ம் ஆண்டு முதல் சுமார் 50 ஆண்டுகள் எனது நெருங்கிய நண்பராக இருந்தவர். நான் சென்னை வரும்போது எல்லாம் தவறாமல் கருணாநிதியை சந்தித்து உரையாடுவதை வழக்கமாக வைத்திருந்தேன்.
1969-ம் ஆண்டு அண்ணா மறைந்த போது கருணாநிதி முதல்வராக இருந்தார். அப்போது மாநிலங்களின் சுயாட்சி உரிமைக்காக, கூட்டாட்சி தொடர்பான கருத்தரங்கை நடத்தினார் கருணாநிதி. அதில் நானும் பங்கேற்று பேசினேன். 2009-ம் ஆண்டு நான் நிதி அமைச்சராக இருந்த போது கருணாநிதி முதல்வராக இருந்தார். வட மாநிலங்களைவிட தமிழகம் பல மடங்கு வளர கருணாநிதியே காரணம்.. தலைவர்கள் புகழஞ்சலி இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். தமிழ் மக்களின் மீதும் தமிழகத்தின் வளர்ச்சி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர் கருணாநிதி. பெரியார், அண்ணாவைத் தொடர்ந்து திராவிட இயக்க கொள்கைகளை முன்னெடுத்து சென்றவர் கருணாநிதி என பேசினார்.
இதுதான் பிரணாப் முகர்ஜி பொதுநிகழ்வில் பேசிய கடைசி பேச்சு.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications