சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீம் அரசியல் முதல் தொகுதி தேர்வு வரை.. திமுகவிற்கு பிகே விதிக்கும் 6 கட்டளைகள்.. ஆட்சியை பிடிக்க வழி

திமுகவிற்கு அரசியல் ஆலோசகராக சேர்ந்து இருக்கும் ஐ பேக் நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோர், மிக முக்கியமான 6 கட்டளைகளை அக்கட்சிக்கு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரசாந்த் கிஷோருடன் இணைந்த திமுக... இனி என்ன நடக்கும்? | Prashant Kishor’s I PAC will help DMK

    சென்னை: திமுகவிற்கு அரசியல் ஆலோசகராக சேர்ந்து இருக்கும் ஐ பேக் நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோர், மிக முக்கியமான 6 கட்டளைகளை அக்கட்சிக்கு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் அதிமுக - திமுக இரண்டும் மாபெரும் கூட்டணியை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

    தமிழகத்தில் திமுகவிற்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் ஆலோசகராக இருக்கிறார் . கடந்த நவம்பர் மாதம்தான் இவர் அதிகாரபூர்வமாக திமுகவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஆனால் அதற்கு முன்பே அக்டோபர் மாதமே அதிகாரபூர்வமற்ற முறையில் பிரசாந்த் கிஷோர் திமுகவிற்காக திட்டங்களை வகுத்து வந்தார். ஆனால் நேற்றுதான் இதை அதிகாரபூர்வமாக வெளியே தெரிவித்தனர்.

    பிரசாந்த் கிஷோர் எப்படி

    பிரசாந்த் கிஷோர் எப்படி

    பிரசாந்த் கிஷோர் பொதுவாக அரசியல் ஆலோசகராக இணைந்தவுடன் செய்யும் முதல் விஷயம், தனக்கென்று அந்த மாநிலத்தில் ஒரு குழுவை உருவாக்குவதுதான். தன்னுடைய தலைமை குழுவில் இருக்கும் ஐபேக் நிறுவன ஊழியர்கள் எப்போதும் போல இருப்பார்கள். அவர்கள் போக, அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற நபர்களை பிரசாந்த் கிஷோர் தேர்வு செய்வார். இதற்காக அவர் ஏற்கனவே முக்கிய நபர்களை சந்தித்து பேச தொடங்கிவிட்டார். அரசியல் வரலாறு, தேர்தல் நுணுக்கம், புள்ளியியல் அறிவு, வரலாறு, செய்தி அறிவு, தொழில்நுட்பம், மீம் அறிவு உள்ளிட்ட பல விஷயங்கள் தெரிந்த நபர்களை பணியில் சேர்த்து குழுவை உருவாக்குவார்.

    இரண்டாவது விஷயம்

    இரண்டாவது விஷயம்

    பிரசாந்த் கிஷோர் பொதுவாக இமேஜ் அரசியல் மீது நம்பிக்கை கொண்டவர். இவர்தான் குஜராத் மாடல் என்ற மிகப்பெரிய இமேஜ் அரசியலை உருவாக்கியவர். அதேபோல்தான் தற்போது ஸ்டாலினுக்கும், திமுகவிற்கும் புதிய இமேஜ் ஒன்றை உருவாக்குவார் என்கிறார்கள். திமுக ஆட்சியில் நடந்த நன்மைகள், கட்டப்பட்ட பாலங்கள், சமூக சீர்திருத்த நடவடிக்கைள் என்று அனைத்தையும் மக்களுக்கு எடுத்து செல்வார். இதன் மூலம் திமுகவின் இமேஜை மக்கள் மத்தியில் வேகமாக உயர்த்துவார். ஸ்டாலினின் ''சிறந்த மேயர்'' இமேஜை மீண்டும் கொண்டு வருவார்.

    திமுக அணி

    திமுக அணி

    அதேபோல் திமுகவிற்காக இவர் தனி சமூக வலைதள அணியை உருவாக்க போகிறார். திமுகவின் புகழை பரப்பும் வகையிலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் திமுக குறித்த பேச்சு இருக்கும் வகையிலும் இவர் ஒரு அணியை உருவாக்க போகிறார். திமுகவின் ஐடி விங் வலிமையாக இல்லை என்று அக்கட்சியினர் புகார் வைத்து வருகிறார்கள். அதை போக்கும் வகையில் திமுகவின் ஐடிவிங்கை வலிமைப்படுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவின் ஐடி படையை வடமாநிலங்களில் வலிமைபடுத்தியது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆளும் கட்சி எப்படி

    ஆளும் கட்சி எப்படி

    அதேபோல் அரசியல் புள்ளி விவரங்களை பிரசாந்த் கிஷோர் கையாளுவதில் வல்லவர். இவர் வெளியிடும் புள்ளி விவரங்கள் பெரிய அளவில் அரசியல் முடிவுகளை மாற்றியுள்ளது. இனி வரும் காலங்களில் தமிழகத்தின் அரசியல் பின்னணியை மையமாக வைத்து நிறைய புள்ளி விவரங்கள் வெளியாகும். திமுகவிற்கு சாதகமாக விரைவில் நிறைய புள்ளி விவரங்கள் வெளியாகும் என்று கூறுகிறார்கள். படித்தவர்களை கவரும் வகையில் இந்த புள்ளி விவரம் இருக்கும். இதற்காக பிரசாந்த் கிஷோர் தனி குழுவே வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அரசியல் புள்ளி விவரம்

    அரசியல் புள்ளி விவரம்

    அதேபோல் அரசியல் புள்ளி விவரங்களை பிரசாந்த் கிஷோர் கையாளுவதில் வல்லவர். இவர் வெளியிடும் புள்ளி விவரங்கள் பெரிய அளவில் அரசியல் முடிவுகளை மாற்றியுள்ளது. இனி வரும் காலங்களில் தமிழகத்தின் அரசியல் பின்னணியை மையமாக வைத்து நிறைய புள்ளி விவரங்கள் வெளியாகும். திமுகவிற்கு சாதகமாக விரைவில் நிறைய புள்ளி விவரங்கள் வெளியாகும் என்று கூறுகிறார்கள். படித்தவர்களை கவரும் வகையில் இந்த புள்ளி விவரம் இருக்கும். இதற்காக பிரசாந்த் கிஷோர் தனி குழுவே வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விவாத நிகழ்ச்சி

    விவாத நிகழ்ச்சி

    அதேபோல் டிவி விவாத நிகழ்ச்சிகளில் என்ன பேச வேண்டும், செய்திகளுக்கு என்ன பேட்டி கொடுக்க வேண்டும், வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் எது, எங்கு எல்லாம் போட்டியிட கூடாது, எந்த இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு விட்டு கொடுக்க வேண்டும். யாருடன் கூட்டணியை முறிக்க வேண்டும் என்பது குறித்தும்,பிரசாந்த் கிஷோர் முக்கியமான முடிவுகளை எடுப்பார். இந்த 6 விஷயங்கள், வரும் தமிழக சட்டசபை தேர்தலில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும், தேர்தல் முடிவுகளை அடியோடு மாற்றும் என்று கூறுகிறார்கள். இதுதான் திமுக ஆட்சியை பிடிப்பதற்கான ஷாட் ரூட் என்றும் கூறுகிறார்கள்.

    English summary
    Prashant Kishor 6 suggestions to DMK to win in 2021 Tamilnadu assembly elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X