ஏய் ****! எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்! அடக்குனா அடங்குற ஆளா..பேஸ்புக்கில் கொந்தளித்த அன்னபூரணி!
சென்னை : என்னிடம் உண்மை இருக்கிறது சத்தியம் இருக்கிறது எனவும் நான் யாருக்கும் பயப்பட வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை என தனியார் தொலைக்காட்சி ஊழியர் ஒருவரை குறிப்பிட்டு பிரபல பெண் சாமியார் அன்னபூரணி அரசு அம்மா ஆவேசத்துடன் வெளியிட்டிருக்கும் வீடியோ தான் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிகவும் பிரபலம் ஆன அன்னபூரணி அரசு அம்மா எனும் பெண் சாமியார், தன்னை ஆதிபராசக்தியின் அடுத்த உருவம் என கூறி வருவதுடன், அவ்வபோது பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் அட்வைஸ் கொடுத்து பக்தி பரவசத்தில் ஆழ்த்தி வருகிறார்.
கடந்த புத்தாண்டு தினத்தன்று செங்கல்பட்டு பகுதியில் ஆதிபராசக்தி அம்மாவின் திவ்ய தரிசன நிகழ்ச்சி நடைபெறும் என விளம்பரங்கள் செய்யப்பட்டது. அந்த விளம்பரத்தில் இருந்த சாமியாரின் முகத்தை பார்த்த நெட்டிசன்கள் இதை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என மண்டையை குழப்பிக் கொண்டனர்.

அன்னபூரணி அரசு
மேலும் நன்கு தெரிந்த முகம் போல இருந்த நிலையில் நீங்க யார் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என தேடத் தொடங்கினர். தனியார் தொலைக்காட்சி நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு கணவன் பஞ்சாயத்து குறித்து பேசிய அன்னபூரணி தான் அவர் என்பதனை கண்டுபிடித்த சமூக வலைதளவாசிகள் அவரை ட்ரோல் செய்ய தொடங்கினர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஆன்மீக பணி செய்வதே தனது பணி என ஆன்மீக சேவை ஆற்றி வருகிறார்.

பெண் சாமியார் அட்ராசிட்டி
மேலும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் அவதாரம் தான் எனக் கூறி திடீரென பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்குவதாக திருவண்ணாமலையில் ஒரு இடத்தை வாங்கி அதில், பக்தகோடிகளுடன் சேர்ந்து பூஜை, அது இது என அட்டகாசம் செய்து வருகிறார். அம்மா தாயே ஆதிபராசக்தி என பக்தி பரவசம் பொங்க காலில் விழும் பக்தர்களை பார்த்து வைப்ரேஷன் ஆகி முகபாவனைகளால் மிரட்டி எடுப்பது அன்னபூரணி அம்மா அரசுவின் தனி சிறப்பு. அந்த வீடியோக்கள் எல்லாம் தற்போது வரை சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

மீண்டும் சர்ச்சை
இந்த நிலையில் தான் மீண்டும் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். சாமியார் அன்னபூரணி அரசு அம்மா அதாவது தன்னிடம் தீட்சை பெற வரும் பக்தர்களிடம் காணிக்கை என்ற பெயரில் பணம் வசூலிப்பதாக ஆடியோ ஒன்று வெளியானது. இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டது. இந்த நிலையில் தனக்கு எதிராக செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி ஊழியருக்கு மிரட்டல் கொடுக்கும் வகையில் அன்னபூரணி அரசு பேசியிருப்பது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆவேச வீடியோ
அதில் பேசியுள்ள அன்னபூரணி அரசு அம்மா,"ஆன்மீக சேவை ஒன்றும் இலவசம் கிடையாது. ஆன்மீகம் தேடி வருபவர்களிடம் கடந்த ஆறு வருடத்திற்கு மேலாகவே நான் பணம் வசூல் செய்து வருகிறேன். அதற்கு பெயர் குருதட்சனை! மோசடி இல்லை. இங்கு இலவசத்திற்கு மதிப்பே கிடையாது. தற்போது வரை மக்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆன்மீகம் என்ற பெயரில் எவ்வளவு மோசடிகள் பித்தலாட்டங்கள் நடக்கிறது. போலி சாமியார்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் உண்மையான ஆன்மீகத்தை வழங்கி வருகிறேன் நான் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

அடங்க மாட்டேன்
உங்களுக்கே இவ்வளவு தைரியம் இருந்தால் எல்லாவற்றையும் நேருக்கு நேர் சந்தித்து வரும் எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும். என்னை தீண்டினால் நொறுங்கிப் போகும் ஆள் நான் கிடையாது. என்னிடம் உண்மை இருக்கிறது. சத்தியம் இருக்கிறது. நான் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை .எனவே பயப்படவும் மாட்டேன். அடங்கிப் போகவும் மாட்டேன்." என அந்த ஊழியரை ஒருமையில் திட்டிப் பேசி இருக்கிறார் அன்னபூரணி அரசு. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications