திமுகவை சீண்டிய பிரேமலதா விஜயகாந்த்! அதிமுக பற்றி கப்சிப்! தேமுதிகவில் அதிரடி மாற்றங்கள்!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு என இருப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
அரசியலுக்கே வரமாட்டேன் எனக் கூறிவிட்டு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகி இருப்பதாகவும் தங்கள் குடும்பத்திலிருந்து வேறு யாரும் வரமாட்டார்கள் என முன்பு ஸ்டாலின் கூறியதாகவும் பிரேமலதா விமர்சித்தார்.
இதனிடையே திமுகவை கடுமையாக சீண்டிய பிரேமலதா, அதிமுக பற்றிய கேள்விகளுக்கு அது அந்த கட்சியின் உள்கட்சி பிரச்சனை என ஒரே வரியில் கூறிவிட்டு புறப்பட்டார்.

புத்தாண்டு தினம்
ஆங்கில புத்தாண்டையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்தை கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு அழைத்து வந்த பிரேமலதா அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜயகாந்த் உடலில் என்ன பிரச்சனை என்பது குறித்து பேசினார். விஜயகாந்துக்கு நடையிலும் பேச்சிலும் மட்டுமே பிரச்சனை இருப்பதாகவும் மற்றபடி அவரது உடல்நலம் ஆரோக்யமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தேமுதிகவை பொறுத்தவரை யாருக்கு என்ன பதவி கொடுக்க வேண்டும் என்பதை விஜயகாந்த் தான் முடிவெடுப்பார் என பிரேமலதா கூறினார்.

திமுக மீது விமர்சனம்
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு என இருப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்தார். மேலும், வாரிசு அரசியல் குறித்தும் கடுகடுத்தார். பிரேமலதா விஜயகாந்தின் பேச்சை வைத்து பார்த்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேறு பாதையில் பயணிக்கத் தயாராகிவிட்டார் போல் தெரிகிறது. பாஜகவை பற்றியோ அதிமுகவை பற்றியோ அவர் பெரிதாக எந்த விமர்சனத்தையும் முன் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேமுதிகவில் மாற்றங்கள்
தேமுதிகவில் விரைவில் மாற்றங்கள் நிகழும் எனக் கூறிய பிரேமலதா, தனது மகன் விஜய பிரபாகரனுக்கு கட்சிப் பதவி வழங்குவது குறித்து எதுவும் பேசவில்லை. இதனிடையே வாக்கு இயந்திரம் தொடர்பாக மத்திய அரசு நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என அவர் கூறியிருக்கிறார். விஜயகாந்த் ஓய்வில் இருந்தாலும் கூட கட்சியை அவர் தான் வழிநடத்துகிறார் என்பதை மீண்டும் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தேமுதிக உட்கட்சி
தேமுதிகவில் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடியும் தருவாயில் இருப்பதாகவும் விரைவில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு நடத்தப்படும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications