"ஏன் இவ்வளவு நாள் திமுக உடன் கூட்டணி அமையலனு நான் ஃபீல் பண்றேன்.." பிரேமலதா விஜயகாந்த் வருத்தம்!
கடலூர்: இவ்வளவு ஆண்டுகளாக திமுகவுடன் கூட்டணி அமையவில்லை என்பதை நினைத்து உண்மையாகவே நான் ஃபீல் பண்ணுறேன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக தவறான கூட்டணியில் இருந்துவிட்டோமோ என்ற எண்ணம் உருவாகிவிட்டதாகவும் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக முதல்முறையாக இணைந்திருக்கிறது. தேமுதிக தொடங்கப்பட்டு முதல்முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ள சூழலில், அந்தக் கட்சிக்கு 10 சீட் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் அளிக்கப்பட்டது. அதன்படி ராஜ்ய சபா எம்பியாக சுதீஷ் பொறுப்பேற்று கொண்டார்.

அதேபோல் தேமுதிக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, உடனடியாக பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்து வருகிறார்.அதுமட்டுமல்லாமல் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காகவும் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்வது திமுகவினரை கவர்ந்துள்ளது. ஒவ்வொரு பிரச்சாரத்திலும் திமுகவுக்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் தூள் கிளப்புகிறார்.
அதேபோல் எடப்பாடி பழனிசாமி முன் வைக்கும் விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்து வருகிறார். அதிலும் எடப்பாடி பழனிசாமி ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று ஆதாரத்துடன் பிரேமலதா விஜயகாந்த் நிரூபித்துவிட்டார். இது எடப்பாடி பழனிசாமி மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
இந்த நிலையில் கடலூரில் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ச்சியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கடலூரில் கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் பிரேமலதா சந்தித்தார். அப்போது பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், திமுக உடன் ஏன் இவ்வளவு நாட்கள் கூட்டணி அமையவில்லை என்று உண்மையாகவே நான் ஃபீல் செய்கிறேன்..
ஒரு தவறான கூட்டணியில் இவ்வளவு நாட்களாக இருந்துவிட்டோமா என்ற எண்ணம் வந்துவிட்டது. கலைஞர் மீது விஜயகாந்துக்கு அவ்வளவு பாசம் உள்ளது. கலைஞருக்கும் உறவு இருந்தது. ஒரு அப்பாயின்ட்மென்ட் கேட்டால், உடனடியாக கொடுப்பார்கள். ஏதாவது ஒரு கோரிக்கை வைத்தால் கூட, உடனடியாக விஜயகாந்துடன் நேரடியாக காலை 6 மணிக்கு பேசக் கூடியவர் கலைஞர்.
இரு தெய்வங்களும் மேல் இருந்து ஆசீர்வாதம் அளிப்பதால் தான் இந்த கூட்டணி அமைந்துள்ளது. குடும்ப உறவு இப்போது கூட்டணி உறவாக மாறி இருக்கிறது. விருத்தாசலம் தொகுதியை ஏன் தேர்வு செய்தேன் என்பதை நீங்களே சொல்லிவிட்டீர்கள். தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தங்கள் மாவட்டத்தில் நான் போட்டியிட வேண்டும் என்று எனக்காக விருப்ப மனு கொடுத்தார்கள். ஆனாலும் விருத்தாசலம் தொகுதியை என் விருப்பத்தாலேயே தேர்வு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications