கரூர் துயரச் சம்பவ எதிரொலி.. பிரேமலதா விஜயகாந்தின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு!
சென்னை: கரூரில் நடந்த துயரச் சம்பவத்தின் எதிரொலியாக உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கிருஷ்ணகிரியில் நடத்த இருந்த ரோடு ஷோ மற்றும் வேன் பிரசாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27 ஆம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வரை, அரசியல் கட்சிகளின் சாலை பிரசாரம், ரோடு ஷோக்களுக்கு அனுமதி இல்லை என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
கரூரில் நடந்த துயரச் சம்பவத்தின் எதிரொலியாக, தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்தின் ரோடு ஷோ மற்றும் வேன் மூலமான தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரேமலதாவின் பிரசாரத்திற்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 'இல்லம் தேடி... உள்ளம் நாடி...' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரசார சுற்றுப்பயணத்தின்போது கிருஷ்ணகிரியில் பிரேமலதா விஜயகாந்த் ரோடு ஷோ நிகழ்ச்சி மற்றும் வேன் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
அதேசமயம், பிரேமலதா விஜயகாந்த் மேடை அமைத்து பிரசாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். கரூர் கூட்ட நெரிசல், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பிரேமலதாவின் ரோடு ஷோவுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர் -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
நிலைமை மோசமாகுது! அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள்! சிங்கப்பெண் சிறப்புப் படை ஏன் தோற்றது? -
கதறிய கழகங்கள்.. தட்டித் தூக்கிய தவெக! விஜய்யின் பெருவெற்றிக்கு காரணம் என்ன? உங்க கருத்தை சொல்லுங்க! -
சண்டைக்கு ரெடியாக திமுக.. சட்டசபையில் சமாளிக்குமா தவெக? எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி தொடக்கம் -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
விஜய்க்கு விஷால் கொடுத்த வித்தியாசமான பரிசு.. கையில் கவனிச்சீங்களா? இது பலருக்கு பாடம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
இனி 8 ஆம் வகுப்பு வரை காலை உணவு.. திமுக திட்டத்தை விரிவாக்கம் செய்யும் முதல்வர் விஜய் -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா












Click it and Unblock the Notifications