தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கவும், 15,058 மின் பணியாளர்களை நியமிக்கவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற எரிசக்தித் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரிய துணை நிறுவனங்களுடன் மின் உற்பத்தி, மின் தேவை, மின் விநியோகம் மற்றும் மின் கட்டமைப்பை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது. தவெக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்படுவது பொதுமக்களை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடையால் மக்கள் படாத பாடு படுகிறார்கள்.

TANGEDCO CM Vijay Orders 231 New Substations Worth Rs 15 032 Crore to Strengthen Tamil Nadu Power Infrastructure

தொடர் மின் வெட்டு பிரச்சினை

சென்னையில் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் மின் தடை ஏற்படுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துவதையும் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக காண முடிந்தது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு மின் வெட்டு பிரச்சினைக்க்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் எரிசக்தி துறை ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மின் துறை அமைச்சர் நிர்மல் குமார், துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது முதல்வர் விஜய் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் விஜய் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

முதல்வர் விஜய் உத்தரவு

தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைத்திடவும், மின் பகிர்மானச் சீரமைப்புத் தேவையான 15,058 மின் பணியாளர்களை முறையப்படி நியமிக்கவும், மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்து, மின் பணியாளர்களை நேரடிப் பணியில் ஈடுபடுத்திடவும் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற எரிசக்தித் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதல்வர் விஜய் தலைமையில் இன்று (16.6.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற எரிசக்தித் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரிய துணை நிறுவனங்களுடன் மின் உற்பத்தி, மின் தேவை, மின் விநியோகம் மற்றும் மின் கட்டமைப்பை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் போதுமான அளவில் இருப்பதால், மாநிலத்தில் மின்சார பற்றாக்குறை எதுவும் இல்லை. இருப்பினும், சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களின் சில இடங்களில் உள்ள பழமையான மின் உபகரணங்கள், நிலத்தடி மின் கேபிள் பழுதுகள், அதிகரித்துள்ள மின் பயன்பாடு, பராமரிப்புப் பணிகள், பல்வேறு சேவைத் துறைகள் சாலை தோண்டும் பணிகளின்போது எதிர்பாராதவிதமாக மின்கேபிள்கள் சேதமடைவது போன்ற காரணங்களினால் பகிர்மான அளவில் அவ்வப்போது மின்தடைகள் ஏற்பட்டுள்ளன.

231 புதிய துணை மின் நிலையங்கள்

இவ்வாறான பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, சென்னை மாநகர் பகுதியில் மட்டும் சுமார் 2,275 கோடி ரூபாய் மதிப்பில் மின் விநியோக கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. மாநிலம் முழுவதும் 121 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட துணை மின் நிலையங்கள் 10,109 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் 231 புதிய துணை மின் நிலையங்கள் 15,032 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளன.

TANGEDCO CM Vijay Orders 231 New Substations Worth Rs 15 032 Crore to Strengthen Tamil Nadu Power Infrastructure

மின் விநியோக சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில், கூடுதலாக 77 புதிய மின்தடை நீக்க (Fuse-Off Call) மையங்கள், 7 கூடுதல் மின்பழுது நீக்கும் குழுக்கள், 125 மின் பழுது நீக்கும் வாகனங்கள், 10 உயர்மட்ட கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 2 மின் புதைவு கேபிள் பழுது கண்டறியும் குழுக்கள் செயல்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் பொதுமக்களின் புகார்களுக்கு விரைவான தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை

மேலும், மின்னகம் (9498794987) மூலம் 24 மணி நேரமும் சமுக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாக பொதுமக்களின் புகார்கள் கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விரைவில் வாட்ஸ்அப் சேவையும் புகார் மேலாண்மை அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, மின் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems), புதிய அணுமின் நிலையம் மற்றும் நீர்மின் திட்டங்கள் மூலம் எதிர்கால மின் தேவையைப் பூர்த்தி செய்ய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு மக்களுக்கு தரமான, நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார சேவையை வழங்க உறுதிபூண்டுள்ளது. மின் விநியோக கட்டமைப்பை தொடர்ந்து வலுப்படுத்தும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் மின் கோளாறுகளை மின்னகம் சேவை மையங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வழிமுறைகள் மூலம் தெரிவித்து உடனடி சேவையை பெறலாம். இக்கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மின் பழுது காரணமாக ஏற்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

125 ரோந்து குழுக்கள்

நடவடிக்கை எடுத்து சரி செய்திட அறிவுறுத்தினார்கள். மேலும், மின் பழுதுகளைச் சரிசெய்திடத் தேவையான 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும். மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்திடவும். மின் பணியாளர்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்திடவும் ஆணையிட்டார்கள்.

சென்னையைப் பொறுத்தவரையில் ஏற்கனவே உள்ள 125 ரோந்து குழுக்களை சுற்றுப்பணியில் ஈடுபடுத்தவும். அக்குழுவினர் அவசரப் பணிகளுக்காக புகார் பெறப்படும் இடங்களுக்குச் சென்று புகார் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, பழுதினைச் சரி செய்திடவும். பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கிட தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் அதன் நிறுவனங்கள் சீரிய முறையில் செயலாற்றிட வேண்டுமெனவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+