Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலங்காத்தால.. முதல் ஃப்ளைட்ல மும்பைக்கு பறந்த பிரேமலதா! கூடவே போன வாரிசுகள்! காத்திருக்கும் பிரளயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகத்தில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம், தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றிய இந்த கூட்டம், 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக தீவிரமாக பணியாற்ற தொடங்கி விட்டதற்கான அறிகுறியாகவே பார்க்கப்பட்டது. ஆனால், இந்த கூட்டம் நடந்த அதே நாளில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திடீரென மும்பைக்கு பயணம் மேற்கொண்டது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இணையும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, மறைந்த விஜயகாந்த் காலத்திலிருந்தே பாஜக- தேமுதிக கூட்டணி இல்லையென்றாலும், முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டது என்றும் சொல்லவும் முடியாது.

இந்நிலையில், சமீபத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழ்நாட்டுக்கு வந்து அதிமுக, அமமுக, பாமக உள்ளிட்ட பல கட்சித் தலைவர்களை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தபோதும், பிரேமலதாவை சந்திக்கவில்லை. இதுவே அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது.

Premalatha Vijayakanth dmdk nda

பாஜக தேமுதிக பேச்சு

இதற்கு பதிலளித்த பிரேமலதா, "தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வருமாறு யாரும் எங்களை அழைக்கவில்லை" என்று வெளிப்படையாகக் கூறியிருந்தார். இந்த கருத்தே, தேமுதிக - என்டிஏ உறவில் ஒரு அதிருப்தி நிலவுகிறது என்ற எண்ணத்தை பலப்படுத்தியது. இதற்கிடையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரக் கூடும் என்ற தகவல் பாஜக வட்டாரங்களில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, தற்போதைக்கு தேமுதிகவுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்த வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பியூஷ் கோயலுக்கு அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக தரப்பில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்காக 10 சட்டமன்றத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் மத்திய இணை அமைச்சர் பதவி போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கோரிக்கைகளை உடனடியாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே, பியூஷ் கோயல் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் ஒதுங்கியதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

வெண்ணெய் பானையை உடைச்சு.. நெய்க்கு அலையும் விஜய்! லட்டு மாதிரி சான்ஸ்.. மிஸ்ஸாக்கிய அடிவருடிகள்!

திடீர் மும்பை பயணம்

இதற்கிடையில், பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் சூழ்நிலையில் திமுக தரப்புடன் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளையும் பிரேமலதா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் தான், பிரதமர் மோடியின் பொதுக் கூட்டம் நடைபெற்ற அதே நாளில், அதிகாலை 5.45 மணி விமானத்தில் பிரேமலதா மும்பை சென்றுள்ளார். அவருடன் அவரது மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோரும் பயணம் செய்துள்ளனர்.

தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை

இந்த திடீர் மும்பை பயணம் அரசியல் ரீதியான முக்கிய பேச்சுவார்த்தைக்காகவா? என்டிஏ தரப்பின் மூத்த தலைவர்களை சந்திப்பதற்காகவா? அல்லது திமுக கூட்டணி தொடர்பாக அக்கட்சி நிர்வாகிகளை ரகசியமாக சந்திப்பதற்காகவா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதே நேரத்தில், இது முழுக்க முழுக்க தனிப்பட்ட குடும்ப விஷயமாகவும் இருக்கலாம் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. ஆனால், தேர்தல் நெருங்கி வரும் இந்த சூழலில், தமிழகத்தின் ஒரு முக்கிய அரசியல் தலைவரான பிரேமலதா விஜயகாந்த்-ன் திடீர் பயணத்தை சாதாரணமாகவும் எடுத்துக் கொள்ள முடியாது.

முக்கிய திருப்பம்

சுருக்கமாகச் சொன்னால் பிரேமலதா விஜயகாந்தின் மும்பை பயணம் எதற்காக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலை வைத்து பார்க்கும் போதும், கூட்டணியை இன்னும் அவர் இறுதிச் செய்யாமல் இருப்பதை கவனிக்கும் போதும், பல சஸ்பென்ஸ்களை கொண்டதாகவே இருக்கிறது. வரும் நாட்களில் இந்த பயணத்தின் பின்னணி நிச்சயம் வெளியே வரும். அப்போது தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்படும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+