பொங்கல் போனஸ்: ஆசிரியர்களுக்காக முதல்வரிடம் முக்கிய கோரிக்கை வைத்த பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: பகுதி நேர ஆசிரியர்களுக்குப் பொங்கல் போனஸ் வழங்கவும், திமுக தேர்தல் வாக்குறுதி 181 இன் படி பணி நிரந்தரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கடந்த 12 ஆண்டுகளாகவும் பொங்கல் போனஸ் வழங்கப்படாமல் உள்ளதற்கு தேமுதிக கண்டிக்கிறது. பொங்கல் போனஸ் தொகையைத் தமிழ்நாடு அரசு நிதியிலிருந்து தான் வழங்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது அதனைத் தமிழ்நாடு அரசுப் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைக்கப் பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சர் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்.

ஆனால், இந்த கோரிக்கையை கண்டுகொள்ளாமல் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கைவிட்டதால் தான் ஒருமுறைகூட போனஸ் பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்ற முழு நேர மற்றும் பகுதி நேர பணியாளர்களுக்குப் பொங்கல் போனஸ் கிடைக்கும் போது, அதைப் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைக்கச் செய்வது தான் நியாயம் ஆகும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளதாவது: தமிழக அரசின் பொங்கல் போனஸ் பகுதி நேர ஆசிரியர்களுக்கும் கிடைக்க முதல்வர் உறுதி செய்ய வேண்டும். 2012 ஆம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கடந்த 12 ஆண்டுகளாகவும் பொங்கல் போனஸ் வழங்கப்படாமல் உள்ளதற்கு தேமுதிக கண்டிக்கிறது.
13 ஆண்டுகளாக பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கு இந்த முறையாவது பொங்கல் போனஸ் வழங்கத் தமிழக முதல்வரை தேமுதிக சார்பில் வலியுறுத்துகிறேன். இந்த பொங்கல் போனஸ் தொகையைத் தமிழ்நாடு அரசு நிதியிலிருந்து தான் வழங்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது அதனைத் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி கற்பித்துத் தருகின்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைக்கப் பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சர் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்.
ஆனால், இந்த கோரிக்கையை கண்டுகொள்ளாமல் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கைவிட்டதால் தான் ஒருமுறைகூட போனஸ் பகுதிநோ ஆசிரியர்களுக்குக் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்ற முழு நேர மற்றும் பகுதி நேர பணியாளர்களுக்குப் பொங்கல் போனஸ் கிடைக்கும் போது, அதைப் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைக்கச் செய்வது தான் நியாயம் ஆகும்.
தற்போது 12,500 ரூபாய் சம்பளம் தான் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. குறைந்த சம்பளம் இந்த காலத்தில் போதுமா என்பதைத் தமிழக முதல்வர் அவர்கள் நினைத்துப் பார்த்து, பகுதிநேர ஆசிரியர்களுக்குத் தேர்தலின்போது கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், தொகுப்பூதியம் முறையை கைவிட்டு, காலமுறை சம்பளம் வழங்கப்பட்டால் தான் தற்போதுள்ள 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும். எனவே பொங்கல் போனஸ் வழங்குவதோடு, பணிநிரந்தரம் செய்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கத் தமிழக அரசை தேமுதிக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications