தேமுதிகவை இதுவரை எந்தக் கட்சியும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை! சஸ்பென்ஸ் உடைத்த பிரேமலதா!
சென்னை: தேமுதிகவை இதுவரை எந்தக் கட்சியும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் இது குறித்து விஜயகாந்தே விரைவில் அறிவிப்பார் எனவும் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு அண்ணாமலை நடத்தும் பாதயாத்திரை தொடக்க விழாவுக்கு வருமாறு தேமுதிகவுக்கு அழைப்பு வந்ததாகவும் அதனால் தங்கள் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளரை தங்கள் பிரதிநிதியாக அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற என்.டி.ஏ. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு பாஜக தலைமை தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதையும் அவர் மறுக்கவில்லை.
இதனிடையே திடீரென காவிரி விவகாரம் பற்றி டிராக்கை மாற்றிய பிரேமலதா விஜயகாந்த், அமைச்சர் துரைமுருகனை கடுமையாக விமர்சித்தார். வாய்ச்சவடாலை தவிர துரைமுருகனுக்கு எதுவும் தெரியாது என்றும் 60 ஆண்டுகளாக காவிரி பிரச்சனைக்கு ஏன் தீர்வு காணவில்லை எனவும் வெளுத்து வாங்கினார்.
காவிரி பிரச்சனையில் நிரந்தர தீர்வு கிடைப்பதற்கான முயற்சிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தான் முன்னெடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். காவிரி பிரச்சனைக்காக அன்று அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் விஜயகாந்த் பிரதமரை சந்தித்தது பற்றி நினைவுகூர்ந்தார்.
எதற்கெடுத்தாலும் தன்னை சீனியர் மினிஸ்டர் என்று பெருமை அடைத்துக் கொள்ளும் துரைமுருகன் மற்றவர்களுக்கெல்லாம் எதுவுமே தெரியாது என்பதை போல் பேசுவார் என கிண்டல் அடித்தார். இதன் மூலம் திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பது தெரிய வருகிறது.
இதனிடையே அதிமுக, பாஜக தரப்பிலும் இன்னும் தேமுதிகவை அணுகவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் கூட இல்லாத நிலையில் தேமுதிகவை எந்தக் கட்சியும் கண்டுகொள்ளாதது அக்கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் சோர்வை தரும் வகையில் அமைந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications