சிகிச்சை முடிந்து விஜயகாந்த் சிங்கம் போல எழுந்து வருவார்.. பிரேமலதா பேச்சு
விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளதாகவும், மீண்டும், சிங்கம்போல் அவர் எழுந்து வருவார் என்றும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தேமுதிக என்றாலே பிரேமலதா விஜயகாந்த் பெயர் சொல்லாமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு ஆரம்பத்தில் இருந்தே அக்கட்சியின் ஒவ்வொரு அசைவிலும் பிரேமலதாவின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்பட்டது.

பொருளாளர் பிரேமலதா
குறிப்பாக அவரது பிரச்சார பேச்சுக்கள் மக்களிடம் அதிகமாக பேசப்பட்டது. அதனால்தான், தேமுதிக-வில் இதுவரை கட்சி பதவி எதையும் வகிக்காத பிரேமலதா விஜயகாந்துக்கு முதன் முறையாக பொருளாளர் பதவி சமீபத்தில் கொடுக்கப்பட்டது.

விஜயகாந்த் உடல்நிலை
இந்நிலையில், அக்கட்சியின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் தேமுதிக தலைமை கழகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பொருளாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். அப்போது தேமுதிகவின் வளர்ச்சி பணிகள், மீடூ, மற்றும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா விரிவாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சர்ச்சை செய்ய கூடாது
இப்போது எல்லோரும் மீடூ பற்றி பேசுகிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் நெருப்பாக இருந்தால் மீடூ எப்படி வரும். ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழைய முடியும்? இந்த மீ டூ இயக்கத்தை பெண்கள் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர அதை வைத்து சர்ச்சை செய்யக்கூடாது.

சிங்கம்போல வருவார்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருக்கிறார். இன்னும் 15 நாளில் அந்த வெளிநாடு பயணம் அமையவிருக்கிறது. சிகிச்சை முடிந்து அவர் மீண்டும் சிங்கம் போல் எழுந்து வருவார். ஆனால் திமுக, அதிமுகவுக்கு மாற்று கட்சி தேமுதிக தான். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications