Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொண்டர்களை வாழவைத்து அழகு பார்க்கும் அன்னையாகவே இனி என் வாழ்வு.. பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொண்டர்களை வாழவைத்து அழகு பார்க்கும் அன்னையாகத்தான் இனி என் வாழ்வு இருக்கும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவன தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சென்னை தீவுத் திடலில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Premalatha Vijayakanth speech after unveils Vijayakanth photo in dmdk head office

இந்ந நிலையில், தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் திருவுருவப் படம் இன்று திறக்கப்பட்டது. மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்தின் உருவப்படத்தை அவரது மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் திறந்து வைத்துள்ளார்.

விஜயகாந்தின் உருவப் படத்தை திறந்து வைத்த பிரேமலதா விஜயகாந்த், பின்னர் அவர் படத்தை நோக்கி கைகூப்பி வணங்கியபடி கண்ணீர் சிந்தினார். படத்திறப்பு நிகழ்வின் போது பிரேமலதாவின் சகோதரரும், தேமுதிக துணைப் பொதுச்செயலாளருமான எல்.கே சுதீஷ், விஜயகாந்த்தின் மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தார்.

தொடர்ந்து, தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தொண்டர்களை வாழவைத்து அழகு பார்க்கும் அன்னையாகத்தான் இனி என் வாழ்வு இருக்கும். இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை இதுதான் நம் கோவில். இன்று போடும் அன்னதானம் இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை தொடரும். இன்று பலர் அவர் பெயரில் டிரஸ்ட் ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டீர்கள்.

உங்கள் விருப்பப்படி ட்ரஸ்டை நான் அவர் மறைந்த அன்றே ஆரம்பித்துவிட்டேன். முதலில், உங்களிடம்தான் இதைக் காட்டுகிறேன். வள்ளல் விஜயகாந்த் மெமோரியல் அன்னதானம் ட்ர்ஸ்ட்' என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்க வேலைகள் அன்றே ஆரம்பித்து விட்டது." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+