ஈஷாவில் நடந்த மீட்டிங்.. தேர்தல் கூட்டணி குறித்த யூகங்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் சொன்ன விளக்கம்!
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் சமயத்தில், தமிழ்நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருவது நல்ல விஷயம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். அதேசமயம், ஈஷா யோகா மையத்தில் நடந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என பிரேமலதா கூறியுள்ளார். என்.டி.ஏ கூட்டணியில் தேமுதிக இணையக்கூடும் என செய்திகள் பரவி வரும் நிலையில், பிரேமலதா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை, பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணிக் கணக்கை உறுதி செய்துவிட்டன. ஆனால், தேமுதிக, பாமக ராமதாஸ் அணி, ஓ. பன்னீர்செல்வம் அணி, புதிய தமிழகம் உள்ளிட்ட ஒருசில கட்சிகள் மட்டுமே கூட்டணியை இறுதி செய்யாமல் உள்ளன.

தேமுதிகவை பொறுத்தவரை, திமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. அதேசமயம், அதிமுக உடனும் பேசி வருவதாக கூறப்படுகிறது. இதனால் திமுக கூட்டணிக்கு செல்லுமா? இல்லை மீண்டும் அதிமுக கூட்டணியில் இடம்பெறுமா? என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. திமுகவும், அதிமுகவும் தேமுதிக கேட்ட இடங்களுக்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்து வந்ததாக கூறப்பட்டது.
இந்த சூழலில், 2 நாட்களுக்கு முன்பு கோவை ஈஷா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், எல்.அமைச்சர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் பிரேமலதா கலந்துகொண்டதால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இணையக்கூடும் என்ற பேச்சுகள் அடிபடத் தொடங்கியுள்ளன. காரணம், கடந்த ஆண்டு நடைபெற்ற ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சியில் எஸ்.பி. வேலுமணியும், அமித்ஷாவும் கலந்துகொண்டே பிறகே அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேமுதிக எந்த அணியில் இணையும் என்பது குறித்து பெரும் விவாதங்கள் நிலவி வரும் சூழலில் இந்த சந்திப்பு மேலும் எதிர்பார்ப்புகளைத் தூண்டியது. இந்த சிவராத்திரி சந்திப்பு கூட்டணி விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி நிலவி வருகிறது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "ஈஷாவிடம் இருந்து அழைப்பு வந்ததால் அங்கு சென்றோம். மன நிறைவாக இருந்தது. தேமுதிக கூட்டணி அறிவிப்பு விரைவில் வரும். அதுவரை காத்திருங்கள். கூலாக இருங்கள். யாரும் டென்ஷன் ஆக வேண்டாம்" எனக் கூறியுள்ளார்.
ஆட்சியில் பங்கு கேட்பீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அப்படி கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும். அவ்வாறு ஒரு வாய்ப்பு வந்தால், தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது என்று பலமுறை நான் கூறி உள்ளேன்" என அவர் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், "ஈஷா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர் என அனைவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், பிரதமர் மோடி தமிழகம் வருவது நல்ல விஷயம். அதனால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடந்தால் நாம் முதலில் அதை வரவேற்போம்" என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி!












Click it and Unblock the Notifications