100-வது மன் கி பாத் நிகழ்ச்சி: "நாம் என்ற எண்ணத்தை எனக்கு கொடுத்துள்ளது.." பிரதமர் மோடி உரை
சென்னை: பிரதமர் மோடி இன்று 100 வது மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். 100-வது நிகழ்ச்சியை முன்னிட்டு பாஜக நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் அவையிலும் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு அதே ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன்பின், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னரும் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி தொடர்ந்து வருகிறது. மனதின் குரல் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசி வருகிறார். தமிழின் பெருமை குறித்தும் பலமுறை மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி 100 வது அத்தியாத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி 100 அத்தியாத்தை எட்டியுள்ளதை குறிக்கும் விதமாக பாஜக பல்வேறு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் 100-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பப்பட்டது. பிரதமர் மோடி இந்தியில் உரையாற்றினார்.

பிரதமர் மோடியின் உரை நாடு முழுவதும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. பிரதமர் மோடியின் 100-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் அவை தலைமையகத்தில் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையிலும் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பல்வேறு துறை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டு வருகின்றனர். அதேபோல், புதுவை துணை நிலை ஆளுநர் மாளிகையிலும் 100-வது அத்தியாத்தை கேட்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுடன் முக்கிய பிரமுகர்கள் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டு வருகின்றனர்.
100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:- இயற்கை வளங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இயற்கை வளங்களான நீர்நிலைகள், மலைகள், புனிதத் தலங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இயற்கை வளங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் வளர்ந்து வரும் சுற்றுலாத்துறை மேம்படும். வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதற்கு முன்பு நம் நாட்டில் உள்ள 15 இடங்களுக்கு நாம் செல்ல வேண்டும். இந்த மனதின் குரல் நிகழ்ச்சி நாம் என்ற எண்ணத்தை எனக்கு கொடுத்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், " மனதில் இருந்து ஒரு குரல் நிகழ்ச்சியின் மூலமாக நாட்டு மக்களான உங்களை நான் விட்டு விலகுவதுமில்லை.. உங்களை பிரிவதும் இல்லை.. உங்கள் கூடவே இருப்பது போன்று தான் எனக்கு இருக்கிறது" என்றார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications