ராமநாதபுரம், பரமகுடி அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்.. பிரதமர் மோடி திறந்து வைத்தார்
சென்னை: ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை காணொளி காட்சி மூலம், பிரதமர் நரேந்தேிர மோடி இன்று திறந்து வைத்தார்.
Recommended Video
ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
கொரோனா பேரிடர் இரண்டாம் அலையின்போது பரவலின்போது பெரும்பாலான மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டது. அப்போது செயற்கை சுவாசத்திற்கான ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவியது.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இரண்டாவது அலை தாக்கியபோது ஆக்சிஜன் பற்றாக்குறை தான் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. இது அப்போது ஊடகங்களில் செய்திகளாக வந்த போதிலும் கூட ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நடைபெற்றதாக ஆவணங்களில் பதிவாகவில்லை என்று நாடாளுமன்றத்தில் பின்னர் தெரிவிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை போக்க அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும், திரவ நிலை ஆக்ஸிஜன் உருளை, ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் நிறுவ மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

அதன்படிபடையில், ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 11 ஆயிரம் கிலோ லிட்டர் திரவ நிலை ஆக்ஸிஜன் உருளை நிறுவப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் சார்பில் ஒரு கோடியே 50 லட்சம் செலவில் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது.
அதேபோல் பரமக்குடி அரசு தாலுகா மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இவ்விரு ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று காலை 11 மணியளவில் திறந்து வைத்தார்.

முன்னதாக, ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அலுவலகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ரிப்பனை வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் (பொ) காமாட்சி கணேசன் , சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பார்வையிட்டனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications