விடாத கண்டமாக தொடரும் ‘பொங்கல் பரிசு’.. திமுக அமைச்சர்கள் மீதான வழக்கில் ஐகோர்ட் போட்ட அதிரடி ஆர்டர்
சென்னை: அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர. சக்கரபாணி ஆகியோர் மீதான புகாரை விசாரிக்க லோக் ஆயுக்தா அமைப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு தொடர்பான வழக்கில் ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,296 கோடியே 88 லட்சம் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் வெல்லம், புளி ஆகியவை தரமற்ற பொருட்களாக விநியோகம் செய்ய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக அப்போதைய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவள்ளூவரை சேர்ந்த ஜெயகோபி என்பவர் லோக் ஆயுக்தா அமைப்பில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை நிராகரித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் லோக் ஆயுக்தா உத்தரவு பிறப்பித்தது.
இதனை எதிர்த்து ஜெயகோபி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெல்லம், கரும்பு, பருப்பு, புளி உள்ளிட்ட பொருட்கள் தரமற்ற வகையில் இருந்தன. உயிரிழந்த பூச்சிகள் அதில் காணப்பட்டது. தரமற்ற பொருட்கள் வழங்கியதன் மூலம் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது. ஏற்கனவே இதுதொடர்பாக முதல்வருக்கு புகார் அளித்தேன்.
அந்த புகாரின் அடிப்படையில் தரமற்ற பொருட்களை விநியோகம் செய்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி மற்றும் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான புகாரை விசாரிக்க லோக் அயூதாவுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான புகார் குறித்து லோக் ஆயுக்தா உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications