Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொத்து பத்திரங்கள்.. நிலம் வாங்கியுள்ளோருக்கு மகிழ்ச்சி அறிவிப்பு.. பத்திரப்பதிவு கூடுதல் டோக்கன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்திரப்பதிவு துறையில் வருவாய் அதிகரித்து வருகிறது.. அந்தவகையில், மார்ச் மாதம் நடப்பாண்டு முடிவில் இன்னும் அதிக வருவாயை பதிவுத்துறை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சொத்துக்களை வாங்கியிருப்போர் பத்திரப்பதிவு செய்ய அடுத்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இன்று சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்களும் தரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, சுமார் 582 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் துறையாக பதிவுத்துறை விளங்கி வருகின்றன..

property deed registration TN Registration Department

கடந்த 2022-23-ம் ஆண்டில் ரூ.17,296 கோடியும், 2023-24-ம் ஆண்டில் ரூ.18,825 கோடியும் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த டிசம்பர் மாதம் வரையிலான கணக்குப்படி ரூ.14,525 கோடியை எட்டிவிட்டது. எப்படிம் இந்த ஆண்டும், கடந்த வருவாயை முறியடித்து சாதனை பதிவுத்துறை படைக்கும் என்ற எதிர்ப்பும் உள்ளது.

பத்திரப்பதிவு - சுபமுகூர்த்த தினம்

பெரும்பாலானோர் சொத்துக்களை வாங்கி, அவைகளை பத்திரப்பதிவு செய்யும்போதும் நல்ல நேரம், சுபமுகூர்த்த நாட்களை பார்ப்பது வழக்கமாகும். முக்கியமாக, சுபமுகூர்த்த தினத்துக்காக காத்திருப்பார்கள். இதனால், பத்திரப்பதிவு கூட செய்யாமல் எத்தனையோ பேர் முகூர்த்த நாளுக்காக காத்திருக்கிறார்கள்.

அதனால்தான் பத்திரப்பதிவு அலுவலகங்களில் முகூர்த்த நாட்களில் சொத்து பத்திரங்களை பதிவு செய்வதற்காக கூட்டம் அலைமோதுகிறது.. சில நேரங்களில் முகூர்த்த நாட்கள் வார விடுமுறை நாட்களில் வந்து விடுவதால் பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல் மக்கள் ஏமாற்றமடைகின்றனர்.

சார் பதிவாளர் அலுவலகங்கள்

எனவே, இந்த சிக்கலை தவிர்ப்பதற்காகவே, குறிப்பிட்ட சுபமுகூர்த்த தினங்களில் கூடுதலாக பத்திரவுப்பதிவுக்கான டோக்கன்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், விடுமுறை உள்ளிட்ட சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பத்திரங்களை பதிவு செய்யலாம் என்ற நடைமுறையை அரசு உருவாக்கியுள்ளது. பதிவுத்துறை செய்யும் இதுபோன்ற ஏற்பாடுகள் பொதுமக்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது. இதனால் அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைத்துவருகிறது.

அந்தவகையில், இன்றைய தினமும், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவித்திருக்கிறது. இதுகுறித்து பதிவுத்துறை வெளியிட்ட அறிக்கை இதுதான்:

மீண்டும் அதிரடி அறிவிப்பு

"பங்குனி மாதத்தின் மங்களகரமான தினமான மார்ச் 17ம் தேதி அதிகளவில் பத்திர பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளது.

இதனை ஏற்று மார்ச் 17ம் தேதி அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு எற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

மார்ச் முடிவதற்குள் எகிறுமா வருவாய்

நடப்பு மாதத்தில் பத்திரப்பதிவில் வருமானம் அதிகரித்து வருகிறது.. கடந்த 2023-24ம் நிதியாண்டில் 33.3 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த 2024-25-ம் நிதியாண்டில் இதுவரை 32 லட்சம் பத்திரப்பதிவுகள் நடந்தாலும் வருவாய் ரூ.20 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. எப்படியும் இன்னும் 13 நாட்களுக்குள் இந்த மார்ச் மாதம் இறுதபெறும் என்பதால், பத்திரப்பதிவு எண்ணிக்கையும், வருமானமும் அதிகரிக்க கூடுதல் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+