"பிரிச்சி எடுங்க".. மீண்டும் பதிவுத்துறை மாஸ்! இனியும் காத்திருக்க முடியாது..கெடு விதித்த தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை:சொத்து பத்திரங்களில் குறிப்பிடப்படும் கட்டிட மதிப்பு கள ஆய்வு செய்ததை, மேலதிகாரிகள் சரிபார்க்கும் பணிகளை, நான்கு மாதங்களுக்குள் முடிக்க, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

பத்திரப்பதிவில் நிலவும் முறைகேடுகளை தடுக்க பதிவுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. கட்டிட கள ஆய்வு பணிகளையும் முறைப்படுத்தி வருகிறது.

Property Registration by Tamil Nadu Government and Huge instruction Field analysis to determine Building Value

பத்திரங்கள்: காரணம், சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்கள், அந்தந்த பகுதியில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பதிவு செய்யப்படுகின்றன. அப்படி பதிவு செய்யப்படும் பத்திரங்களை, ஓரிரு நாட்களுக்குள்ளேயே உரியவர்களுக்கு அளிக்க வேண்டும்.. இப்படி பணி முடித்து திருப்பி தரப்பட்ட பத்திரங்களின் எண்ணிக்கையை, பதிவாளர்கள் கண்காணிக்கவும், கட்டிட கள ஆய்வு பணிகளுக்காக, பத்திரங்களை தாமதப்படுத்தக் கூடாது என்றெல்லாம் ஏற்கனவே பதிவுத்துறை உத்தரவிட்டிருந்தது.

அதேபோல, பதிவுத்துறையில் பெரும்பாலான சார் பதிவாளர்கள், பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டிடத்தை கள ஆய்வு செய்ய வேண்டும் என்பதுடன், பதிவான பத்திரத்தை தர தாமதம் செய்வதாகவும் புகார்கள் எழுந்தன..

கட்டிட களப்பணி: இதையறிந்த பதிவுத்துறை, இதற்கும் ஒரு கடிவாளத்தை போட்டது.. கட்டிட கள பணி நிலவரம் தொடர்பாக, தினசரி ஆய்வு செய்ய வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது..

அதுமட்டுமல்ல, இது தொடர்பான விபரங்களை, மண்டல வாரியாக அனுப்பவும், டிஐஜிக்களுக்கு பதிவுத்துறை தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.. இதுபோன்ற உத்தரவால், கட்டிட களப்பணி என்று காரணம் சொல்லி பத்திரங்களை வழங்க, சார் பதிவாளர்கள் தாமதிக்கவும் முடியாது

மீண்டும் உத்தரவு: இந்நிலையில், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மீண்டும் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறார். அந்த உத்தரவில் உள்ளதாவது:

"சொத்து பத்திரங்களில் குறிப்பிடப்படும் கட்டிட மதிப்புகளை கள ஆய்வு வாயிலாக, சார் - பதிவாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், சார் - பதிவாளர்கள் அளிக்கும் கள ஆய்வு அறிக்கைகளை, மாவட்ட பதிவாளர், உதவி ஐ.ஜி., மற்றும் டி.ஐ.ஜி.,க்கள் சரிபார்க்க வேண்டும். இதுபோன்ற சரிபார்ப்பு பணிகளை விரைந்து முடிக்காமல், பல அதிகாரிகள் கிடப்பில் போடுவதாக புகார்கள் வந்துள்ளன.

மேலதிகாரிகள்: ஒரு குறிப்பிட்ட நிகழ்வில், இது தொடர்பான கோப்புகளை, மூன்று ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே, கட்டிட கள ஆய்வு விபரங்களை, சம்பந்தப்பட்ட மேலதிகாரிகள், 4 மாதங்களுக்குள் சரிபார்த்து முடிக்க வேண்டும். டி.ஐ.ஜி.,க்கள், மாவட்ட பதிவாளர்கள், சார் - பதிவாளர்கள் இதை உறுதி செய்ய வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெசேஜ்கள்: இதனிடையே இன்னொரு கோரிக்கையும் வெடித்து வருகிறது.. அதாவது, "சென்னை, மதுரை, திருச்சி, கோவை மண்டலங்களில், பதிவு முடிந்து விட்டது, பத்திரத்தை நேரில் வந்து வாங்கி கொள்ளுங்கள்" என்று வாட்ஸ்அப் மெசேஜ்கள் வருகின்றனவாம்.. இந்த தகவலை நம்பி சம்பந்தப்பட்டவர்கள், நேரில் சென்றால், கட்டிட கள ஆய்வு பணிகள் இன்னும் முடியவில்லை என்கிறார்களாம்.

அதனால், கள ஆய்வு முழுமையாக இருந்தால் மட்டுமே, தகவல் தர வேண்டும் என்றும், சார் - பதிவாளர்கள் வேண்டுமென்றே மக்களை அலைக்கழிக்கக்கூடாது, இது தொடர்பான நடவடிக்கையை பத்திரப்பதிவு துறை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+