Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொத்து வாங்குவோருக்கு ஜாக்பாட்! இனி 20 லட்சம் வரை பான் கார்டு தேவையில்லை! மத்திய அரசின் புதிய ரூல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரிச் சட்டத் திருத்தங்களின் தொடர்ச்சியாக, தற்போது சொத்து பரிமாற்றம் மற்றும் பத்திரப் பதிவு நடைமுறைகளில் மிக முக்கியமான மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.. குறிப்பாக சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வீடு அல்லது நிலம் வாங்கும் போது எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்களைக் குறைக்கும் வகையில் இந்த சூப்பர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. அது என்ன தெரியுமா??

நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை, எந்தவொரு அசையாச் சொத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்றால், அதன் மதிப்பு எவ்வளவு இருந்தாலும் வாங்குபவர் மற்றும் விற்பவர் ஆகிய இருவருமே தங்களது நிரந்தர கணக்கு எண்ணை அதாவது பான் நம்பரை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.. இதுதான் தற்போதுள்ள நடைமுறையாகும்..

Property Registration

சொத்து வாங்குவோருக்கு ஜாக்பாட்

ஆனால், தற்போது மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, ரூ.20 லட்சம் வரை மதிப்புள்ள சொத்துக்களைப் பதிவு செய்வதற்கு பான் கார்டு எண் வழங்க வேண்டிய அவசியம் இனி கிடையாது..

இந்த மாற்றமானது குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் வசிக்கும் மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஏனெனில், குறைந்த மதிப்புள்ள நிலங்களை வாங்கும் போது பான் கார்டு இல்லாத காரணத்தால் பல நேரங்களில் பத்திரப் பதிவு தாமதமாவது வாடிக்கையாக இருந்தது..

இப்போது இந்த வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால், சாதாரண மக்கள் எவ்வித தடையுமின்றி தங்களது சொத்துப் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.. இருந்தாலும், ரூ.20 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள சொத்து பரிமாற்றங்களுக்கு பழைய நடைமுறையே தொடரும் என்பதும், அதற்கு பான் கார்டு விவரங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.. இந்த புதிய விதியின் கீழ் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139A-ல் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன..

ரூ.20 லட்சம் பான் கார்டு

மேலும், பான் கார்டு இல்லாதவர்கள் தங்களது விவரங்களை உறுதிப்படுத்த படிவம் 60-ஐ சமர்ப்பிக்கும் நடைமுறை ஏற்கனவே புழக்கத்தில் உள்ளது.. ஆனால், இந்த புதிய உச்சவரம்பு அறிவிப்பு அத்தகைய கூடுதல் ஆவணப் பணிகளையும் பெருமளவு குறைக்கும் என்று கருதப்படுகிறது..

கறுப்புப் பண புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும் பான் கார்டு முறை கடுமையாகப் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், சிறிய அளவிலான பரிமாற்றங்களுக்கு மட்டும் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.. இதன் மூலம் ரியல் எஸ்டேட் துறையில் சிறிய அளவிலான முதலீடுகள் மற்றும் நில விற்பனைகள் வேகம் எடுக்கும் என்று துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகிறார்கள்.

நிலம் வாங்குவோருக்கு மத்திய அரசு குட் நியூஸ்

அரசாங்கத்தின் இந்த அதிரடி முடிவானது டிஜிட்டல் இந்தியா மற்றும் எளிதான வணிகம் ஆகிய இலக்குகளை நோக்கிய ஒரு பயணமாகப் பார்க்கப்படுகிறது.. அதே நேரத்தில், சொத்து வாங்குபவர்கள் மற்ற அடையாள ஆவணங்களான ஆதார் போன்றவற்றை வழக்கம்போல சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை..

இந்த புதிய சலுகையைப் பயன்படுத்தி மக்கள் தங்களது நீண்ட கால கனவான வீடு மற்றும் நிலம் வாங்கும் கனவை எவ்வித கூடுதல் ஆவணச் சிக்கல்களும் இன்றி நிறைவேற்றிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.. இந்த விதிமுறை உடனடியாக அமலுக்கு வருவதால், இனி வரும் நாட்களில் பத்திரப் பதிவு அலுவலகங்களில் ரூ.20 லட்சத்திற்கு உட்பட்ட சொத்துக்களுக்கு பான் கார்டு கேட்கப்பட மாட்டாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+