ஆன்லைனில் சொத்து வரி.. தொழில் வரியை கட்ட இன்றே கடைசி நாள்.. சென்னை மாநகராட்சி போட்ட உத்தரவு
சென்னை: சொத்துவரி மற்றும் தொழில் வரியை செலுத்த இன்றே கடைசி நாள் என்று சென்னை மாநகராட்சி மீண்டும் ஒருமுறை அறிவுறுத்தி உள்ளது..
மாநகராட்சிக்கு முக்கிய வருவாய் இனம் சொத்துவரியாகும்... கிட்டத்தட்ட 13 லட்சம் சொத்து உரிமையாளர்கள் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது.. எனவே, வீடுகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், கடைகள் மூலம் வருடத்துக்கு 2 முறை சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

சொத்துவரி: சொத்துவரி மற்றும் தொழில்வரியை தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டு வருவது வழக்கம்.. இந்த வரி வசூல் மூலம், சென்னை மாநகராட்சிக்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தல், தெரு விளக்குகள் அமைத்தல், தூய்மை பணிகள், பூங்காக்கள், சாலை பராமரித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..
அந்தவகையில், இந்த அரைநிதியாண்டுக்கான சொத்து வரியை செலுத்த வேண்டும் என்று கடந்த ஜூன் மாதம் முதலே, சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி வருகிறது.. இந்த முறையும், சொத்துவரியை தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது.. அந்தவகையில் இன்றுடன் அதாவது செப்டம்பர் 30ம் தேதியே சொத்து வரி செலுத்த கடைசி நாளாகும்.
சென்னை மாநகராட்சி: இன்றைக்குள் சொத்துவரி மற்றும் தொழில்வரியை செலுத்த வேண்டும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.. ஆன்லைன்வழியாகவும் இணைய வழியாகவும் சொத்து மற்றும் தொழில்வரியை செலுத்திக் கொள்ளலாம் கடந்த 2 நாட்காளகவே விடுமுறை என்பதால், ரிப்பன் கட்டிடத்திலுள்ள இயங்கும் வருவாய்த்துறை தலைமையிடம், மண்டலங்களில் உள்ள வருவாய்த்துறையில் சொத்துவரி மற்றும் தொழில்வரி வசூலிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று வரியை செலுத்தாவிட்டால், நாளை அக்டோபர் 1 முதல் இதற்கான அபராத வட்டித் தொகை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாள்: ஒருவேளை 30-ந் தேதிக்கு பிறகு செலுத்தினால், 1 சதவீதம் அபராதம் கட்ட வேண்டுமாம்.. அதனால், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை உடனே செலுத்தி, அபராதத்தை தவிர்க்குமாறு மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். கடந்த வருடம், சொத்துவரி உயர்த்தப்பட்ட பிறகு, நடப்பு ஆண்டின் சொத்துவரி இலக்கானது ரூ.1,600 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது...
வரி இழப்பு: இதுஒருபுறம் என்றால், நீண்ட காலமாகவே சொத்துவரி கட்டாமல் இருப்பவர்கள் யார் யார் என்ற லிஸ்ட்டை மாநகராட்சிக்கு கையில் எடுத்துள்ளது.. காரணம், இப்படி வரியை செலுத்ததால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பையும் ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. அதனால், வரி செலுத்தாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை பாயப்போவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications